Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமானா டகாஃபுல் இன்சூரன்ஸ், “இலங்கையின் ஆண்டின் சிறந்த மொபைல் App” விருதை இன்சூரன்ஸ் ஏசியா விருதுகள் 2024 இல் சுவீகரித்திருந்தது. வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது.
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் சிங்கப்பூர் மரீனா பே சான்ட்ஸ் இல் நடைபெற்றது. பிராந்தியத்தின் சிறந்த காப்புறுதி நிறுவனங்களின் புத்தாக்கமான பங்களிப்புகள் மற்றும் தொழிற்துறையில் கொண்டிருக்கும் தலைமைத்துவ சாதனைகளை கொண்டாடியிருந்தது.
அமானா டகாஃபுல் நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றியமைப்பு மூலோபாயத்தின் அங்கமாக அறிமுகம் செய்யப்பட்ட மோட்டார் காப்புறுதி app கௌரவிக்கப்பட்டிருந்தது. பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற, பாவனையாளரை மையப்படுத்திய அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு இந்த app இனூடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், காப்புறுதித் துறையில் அதன் தலைமைத்துவம் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமானா டகாஃபுல் ஜெனரல் பிரதம நிறைவேற்று அதிகாரி சிவா கார்த்திகன் கருத்துத் தெரிவிக்கையில், “எமது மொபைல் app க்கு இந்த விருதைப் பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். எமது வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தும் சௌகரியமான மற்றும் புத்தாக்கமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பை இந்த கௌரவிப்பு மேலும் உறுதி செய்துள்ளது. இந்த சாதனை எமக்கும் இலங்கைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது, எமது பாவனையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எமது டிஜிட்டல் கட்டமைப்புகளை தொடர்ந்தும் மேம்படுத்த முன்வந்துள்ளோம்.” என்றார்.
app இன் மேம்படுத்தப்பட்ட உரிமைகோரல்கள் கையாளல் கட்டமைப்பு என்பது விசேடத்துவமான உள்ளம்சமாகும். பாவனையாளர்களுக்கு app இனூடாக முழு காப்புறுதி உரிமைகோரல் செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு வசதியளிக்கின்றது. செயற்படுத்தல் மற்றும் படிவங்களை பூர்த்தி செய்து அவற்றின் படங்களை அப்லோட் செய்வது மற்றும் அத்தியாவசிய ஆவணங்களை நிர்வகிப்பது போன்ற சகல செயற்பாடுகளையும் பாவனையாளர்கள் இலகுவாக மேற்கொள்ள முடிவதுடன், தமது உரிமைகோரலின் நிலையை கண்காணித்து, அதனை மீளாய்வு செய்து கொள்ளவும் முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
58 minute ago
6 hours ago