Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Freelancer / 2024 மே 10 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மகாவலி அதிகார சபையுடன் இணைந்து கொமர்ஷல் வங்கி ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வின் போது, இலங்கையின் வடமத்திய மாகாண விவசாயிகளுக்கு விவசாய நடைமுறைகளை நவீனமயமாக்குவதில் டிரோன்களின் பங்களிப்பு தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.
அநுராதபுரம் மாவட்டத்தில் தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சில மாணவர்களுக்கும் நெற்பயிர்களை விதைப்பதற்கும் உரம் மற்றும் விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்துவதற்கும் ட்ரோன்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நிபுணர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விலைமதிப்பற்ற அறிவுசார் நேரடி செயல்விளக்கங்கள், இலங்கை மகாவலி அதிகாரசபையின் பிரதிநிதிகள் மற்றும் ட்ரோன் தீர்வுகளை வழங்கும் நிறுவனமான ஏரோஜெனி ட்ரோன் சேர்வீசஸ் பிரதிநிதிகளினால் இத்திட்டத்துக்கு மூலகாரணியாக அமைந்த வங்கியின் அபிவிருத்தி கடன் திணைக்கள அதிகாரிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டுள்ளது.
—உணவுப் பயிர்கள் விளைவித்தல், அறுவடை செய்தல் மற்றும் பதப்படுத்துதல் போன்றவற்றில் புரட்சியை ஏற்படுத்தும் பொருத்தமான தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம் இலங்கையின் விவசாயம் நவீன யுகத்திற்கு மாற வேண்டும்' என கொமர்ஷல் வங்கியின் தனிப்பட்ட வங்கியியல் பிரதிப் பொது முகாமையாளர் திரு டிலக்ஷன் ஹெட்டியாராச்சி தெரிவித்தார். —நாட்டின் விவசாயத் துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குபவர்களில் ஒருவராக, கொமர்ஷல் வங்கி இந்த மாற்றத்திற்கான ஊக்கியாக விளங்குகிறது, மேலும் இதற்காக நிதி, நேரம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை முதலீடு செய்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.'
தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மேலதிகமாக. ட்ரோன்கள் மற்றும் பிற கண்டுபிடிப்புகளின் பயன்பாடு எவ்வாறு அதிக செலவு குறைந்ததாகவும் நேரத்தை மீதப்படுத்துவதாகவும் உள்ளது என்பதை விவசாயிகளுக்கு கற்றுத்தருவதன் மூலம் நெல் விவசாயம் மற்றும் இதர பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றுவதை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் ஏனைய விவசாயப் பகுதிகளிலும் இது போன்ற விழிப்புணர்வு அமர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago