Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 நவம்பர் 12 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றத்தில் இன்று (12) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூரியுள்ளனர்.
கடந்த சில மாத காலமாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு போன்றன சந்தையில் பெருமளவு அவதானிக்க முடிந்ததுடன், இந்த நிலை மேலும் மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த வாரத்தில் எரிவாயு தட்டுப்பாட்டுடன், மண்ணெண்ணெய் விநியோகத்திலும் கட்டுப்பாடுகளை அவதானிக்க முடிந்தது. வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தமக்கு தேவையான எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை வாங்க வேண்டியிருந்தது. அது போன்று கடந்த மாதங்களில் சீனி, அரிசி மற்றும் பால் மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் இந்த நிலை காணப்பட்டது.
2022 பாதீட்டில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என நிதி அமைச்சரிடம் அண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் வினாவிய போது, மக்களிடமிருந்து பெற வேண்டிய சூழல் காணப்படுவதாக அமைச்சர் பதிலளித்திருந்தார். அதனூடாக, நெருக்கடிக்குள் தத்தளிக்கும் மக்களுக்கு மேலும் சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மற்றுமொரு எரிபொருள் விலை அதிகரிப்பு விரைவில் மேற்கொள்ளப்படலாம். அதுவும் இந்த பாதீட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், தற்போது அமலிலுள்ள வரி விதிப்பனவுகளிலும் அதிகரிப்பு ஏற்படுத்தப்படலாம். குறிப்பாக பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தற்போதைய 8 சதவீதம் என்பதிலிருந்து முன்பிருந்ததைப் போல 15 சதவீதமாக அதிகரிக்கக்கூடும்.
நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் சுகாதார கட்டுப்பாடுகளுடன் மீண்டும் நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், கொவிட்-19 தொற்றாளர் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு பதிவாகிய வண்ணமுள்ளதுடன், அதன் காரணமாக மக்களை அவதானத்துடன் முறையாக பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு நாளாந்தம் சுகாதாரத் துறையைச் சேர்ந்த வெவ்வேறு அதிகாரிகள் ஊடகங்களில் அறிக்கைவிட்ட வண்ணமுள்ளனர். சுகாதாரத் துறைப் பேச்சாளர் குறிப்பிடுகையில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டை முடக்குவதை தவிர் வேறு வழியில்லை என்பதை பகிரங்கமாக தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் மற்றுமொரு முடக்க நிலை வருமாயின், அதன் தாக்கமும் நாளாந்த சம்பளத்துக்கு பணியாற்றி வருமானம் தேடுவோரின் வயிற்றில் விழும் இடியாக அமைந்திருக்கும். அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலைகள், பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்றவற்றுடன், நாடு மீண்டும் முடக்கம் எனும் ஒரு நிலை ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பொருளாதார தாக்கம் பொது மக்களையே சேரும்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்மொழியப்படும் விடயங்கள் பெரிதும் மக்களுக்கு நிவாரணமளிக்காமல், மேலும் சுமையை அதிகரிப்பதாக அமைந்திருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
4 hours ago
5 hours ago