Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 17 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
vivo Mobile Lanka அடுத்த தலைமுறை ஸ்மார்ட் போன்கள் இரண்டை இலங்கையில் அறிமுகப்படுத்தியது. Y50 மற்றும் Y30 ஆகிய இந்த இரு மொடல்களும் இளம் தலைமுறையினரின் ஒன்லைன் பாவனைக்கான தீர்வாக அமைவதுடன், அவர்களது கேமிங் விருப்பங்கள் மற்றும் புதிய படைப்புகளுக்கும் தூண்டுதலாக அமையவுள்ளன.
vivo, ஒரு வர்த்தகநாமம் என்ற வகையில், அடுத்த தலைமுறை மொபைல் அனுபவத்தை வழங்க, புத்தாக்கத்தில் உறுதியாக இருப்பதனை எப்போதும் நம்புவதுடன், Y50 மற்றும் Y30 ஆகியன அந்த உறுதிப்பாட்டுக்கான உதாரணங்களென்பதுடன், இவை அனைத்து தரப்பு இளையோருக்கும் முழுமையான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகின்றன.
இரண்டு மொடல்களும் நீண்ட battery Life, கேமிங் அனுபவம், கவர்ச்சிகரமான கட்டுப்படியாகும் விலையில் தனித்துவமான புகைப்படவியல் அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இளைய தலைமுறையினரின் தேவையை பூர்த்தி செய்யும் Y Series இன் அங்கமாகும்.
"vivoவுக்கு இலங்கை ஒரு முக்கியமான சந்தை. வெவ்வேறு நுகர்வோர் தேவைகள் மற்றும் விலை விருப்பங்களை பூர்த்தி செய்யும் முகமாக V, S மற்றும் Y ஆகிய மூன்று Seriesகளுடன் நாங்கள் இந்நாட்டில் பிரசன்னத்தைக் கொண்டுள்ளோம்.
நாங்கள் தற்போது அறிமுகப்படுத்திய Y50 மற்றும் Y Seriesஇல் அதனைத் தொடர்ந்து வெளியாகும் Y30 ஆகியன, புதுமையான கெமரா மற்றும் battery திறனில் நாம் தீவிர கவனம் செலுத்துவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம்.
இது வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதோடு, எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு சிறந்த செயல்திறனை உறுதி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நாம் தொடர்ச்சியாக புத்துருவாக்கத்தில் ஈடுபடுவதோடு, இலங்கையில் உள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு புதுமையான ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை தொடர்ச்சியாக கொண்டு வருகின்றோம், என vivo Mobile Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரி, கெவின் ஜியாங் தெரிவித்தார்.
vivo Y50 நீண்ட battery Life மற்றும் வலுவான செயற்திறன்
Y50 ஜூலை 16, 2020 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது இளைஞர்களை மையமாகக் கொண்ட மொடலாகும். இது ஒன்லைன் உலகில் அவர்களின் தொடர்ச்சியான பிரசன்னத்தைக் குறிக்கிறது.
இம் மொடலானது உயர் செயல்திறன் மற்றும் diamond வடிவில் மின்னும் 3D கண்ணாடி பின்புறத்தைக் கொண்ட ஒரு நேர்த்தியான, ஸ்டைலான வடிவமைப்பால் தன்னை வேறுபடுத்துகிறது.
வடிவமைப்பு மற்றும் திரை
vivo Y50, 6.53 அங்குல iView திரையைக் கொண்டதுடன், இது 1080p தெளிவுத்திறனுடன், அதிகபட்ச காட்சி அனுபவத்திற்காக குறைந்தபட்ச ஒற்றை punch hole செல்பி கெமராவை உள்ளடக்கியது. இது வீடியோக்களைப் பார்வையிட அல்லது விளையாட்டுகளுக்கு மிகவும் ஏற்றது. இதன் 90.77% வரை நீட்டிக்கப்பட்ட screen to body ratio, 19: 5: 9 என்ற ஈர்க்கக்கூடிய aspect ratio மற்றும் 2340 x 1080 FHD+resolution குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
இதனூடாக பெறப்படும் படங்கள் மற்றும் வீடியோக்கள், அதன் மென்மையான 3D வளைவுகளின் ஊடாக பக்க பேனல்களின் நேர்த்தியான கோடுகளுடனும் ஸ்டைலான ஆளுமையை பிரதிபலிக்கிறது. Pearl White, deep ocean allure மற்றும் Starry Black ஆகிய முதற்தர வண்ணங்களில் கிடைக்கின்றது.
செயற்திறன்
vivo Y50, Snapdragon 665 processor மற்றும் 8GB RAM செயற்திறனை உயர்த்துவதுடன், 128 GB memory அதிக சேமிப்பு திறனை உறுதி செய்கின்றது. multi-turbo 3.0 தொழிற்துறையின் முதல் VPG (vivo Process Guardian) தொழில்நுட்பமானது செயற்திறன் மற்றும் சிஸ்டத்தின் வேகத்தை மேம்படுத்த உதவுகிறது. இச் சாதனத்தால் மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்களால் ஏற்படும் குளறுபடிகளை முன்கூட்டியே கணிக்க முடிவதுடன், அவை ஏற்படுவதற்கு முன்பே அவற்றைக் கண்டறிந்து தீர்க்கும் திறன் கொண்டது.
கெமரா
கெமராவைப் பொறுத்த வரையில், இந்த ஸ்மார்ட்போனானது 13-megapixel பிரதான கெமரா, 120 degrees field-of-view உடன் கூடிய 8-megapixel wide-angle கெமரா மற்றும் 2-2-megapixel portrait கெமரா மற்றும் 4cm focal length உடன் கூடிய 2-megapixel camera ஆகியவற்றைக் கொண்டது. மேலும் முன் பக்கத்தில் punch-hole notch இனுள் f/2.0 aperture lens உடன் கூடிய 16-megapixel கெமெராவையும் கொண்டது.
விலை மற்றும் விபரங்கள்
vivo Y50 இலங்கையில் Pearl White மற்றும் Starry Black (Iris Blue) வண்ணங்களில் கிடைப்பதுடன், ரூபா 52,990.00 ஆக விலையிடப்பட்டுள்ளது.
vivo Y30 3D வடிவமைப்பு மற்றும் reverse சார்ஜிங்
புத்தம் புதிய தோற்றத்துடன் கூடிய Y30, முதற்தர 3D வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பின்புற AI multi-scenario Quad கமெரா மற்றும் முன்பக்க 8MP XXXX கெமரா ஆகியவற்றுடன் கைக்கடக்கமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். கேமிங் மோட் 8.0 வினால் வலுவூட்டப்படுவதால் தடையற்ற விதத்தில் பல செயற்பாடுகளை மேற்கொள்ளவும், கேமிங் அனுபவத்தையும் தருகின்றது. Y30 Emerald Black மற்றும் Dazzle Blue ஆகிய புத்துணர்வூட்டும் நிறங்களில் கிடைக்கின்றது. Gamers மற்றும் விளையாட்டு பிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Y30 இல் உள்ளடக்கப்பட்டுள்ள Jovi சிறப்பம்சமானது பாவனையாளர்களுக்கு கிரிக்கெட், உதைபந்தாட்டம் மற்றும் கூடைப்பந்து போட்டிகளின் இறுதி முடிவுகளையும் அறியக்கூடிய வசதிகளையும் கொண்டுள்ளது.
நீடித்துழைக்கும் battery life மற்றும் முழுமையான செயல்திறன்
Y30 இன் தனித்துவமான முக்கிய அம்சங்களில் ஒன்று 5000 mAh battery ஆகும். இது நாள் முழுவதுமான பாவனையையும், தடையற்ற ஸ்மார்ட்போன் அனுபவத்தையும் உறுதி செய்கிறது. MT6765 உடன் கூடிய Y30, 4GB RAM உடன் வருவதுடன், இது 64GB ROM மற்றும் 128GB ROM என்ற இரு memory திறன்களுடன் கிடைக்கின்றது. இது எந்தவொரு அப்ளிகேஷன், music, வீடியோக்கள், கேம்ஸ்கள் போன்றவற்றை சேமிக்கும் திறனை வழங்குவதுடன், தடையற்ற ஸ்மார்ட்போன் அனுபவத்தினையும் வழங்குகின்றது.
Y30, 9 மணி நேர ஒன்லைன் Gameகளை விளையாடுவதோடு மற்றும் சுமார் 137.09 மணிநேர Music இனை அனுபவித்து மகிழ உதவுகின்றது. அத்தோடு Smart Phone, Smart Watch போன்ற பிற டிஜிட்டல் சாதனங்களை சார்ஜ் செய்ய 5V/1A reverse charging வசதியையும் Y30 ஆதரிக்கிறது.
விலை மற்றும் விபரங்கள்
vivo Y30 இலங்கை சந்தையில் ரூ. 35,990 (4GB + 64GB) மற்றும் Rs. 42,990 (4G+128GB) என்ற விலைகளில் கிடைக்கப்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago
1 hours ago
25 Apr 2025