2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அஜித் நிவாட் கப்ரால் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை யாழ் கிளைக்கு விஜயம்

S.Sekar   / 2021 மார்ச் 08 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்; ஆகியோர் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை யாழ் கிளைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டு பங்கு சந்தை முதலீட்டில் வட மாகாண மக்களின் ஆர்வம், வடமாகாணத்தில் பங்குச்சந்தை செயற்பாடுகளின் முன்னேற்றம்இ புதிய முதலீட்டாளர்களின் ஆர்வம் என்பன தொடர்பாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை (CSE) யாழ் கிளையின் முகாமையாளருடன் கலந்துரையாடினர் 
 
மேலும் இக்கலந்துரையாடலில்  கொழும்பு பங்குப்பரிவர்த்தனை யாழ் கிளையில் உள்ள பங்கு தரகர் நிறுவனங்களான பார்ட்லீட் ரெலிகெயர் செக்கியூரிட்டீஸ்இ சொவ்ட்லொஜிக் பங்கு தரகர் நிறுவனம் மற்றும் நம்பிக்கை அலகு பொறுப்பாட்சி (NAMAL) நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பிராந்திய முதலீட்டு சூழலுக்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்த விஜயம் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .