Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஃபெஷன் பக், கோட்டை புகையிரத நிலையத்தின் அழகியல் தோற்றத்தை மேம்படுத்தும் ஒரு மறுசீரமைப்பு செயற்திட்டத்தை அண்மையில் முன்னெடுத்துள்ளது. இச்செயற்திட்டத்தின் பெரும்பகுதி பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக, புகையிரத நிலைய வளாகத்திற்கான சிறந்த மற்றும் தெளிவான அடையாளங்கள், நேர அட்டவணைகள் மற்றும் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
கொழும்பின் மையப் பகுதியில் உள்ள போக்குவரத்து தனித்துவ சின்னங்களில் ஒன்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதன் முக்கிய தேவையைப் புரிந்துகொண்டு, ஃபெஷன் பக் கடந்த 10 வருடங்களாக கோட்டை புகையிரத நிலையத்தில் உள்ள முக்கிய அடையாள பலகைகளின் பராமரிப்பை தொடர்ந்து கவனித்து வருவதுடன், புகையிரத நிலையத்தின் முக்கிய பாகங்களுக்கு தொடர்ச்சியான மேம்பாட்டு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வந்துள்ளது.
'வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு என்பது ஃபெஷன் பக் நிறுவனத்தின் விழுமிய கட்டமைப்பின் அத்திவாரமாகும். மேலும், இந்த செயற்திட்டமானது கடந்த 10 வருடங்களாக நாம் தொடர்ச்சியாகவும் இடைவிடாத வகையிலும் ஈடுபட்டு வரும் ஒன்றாகும்,' என ஃபெஷன் பக் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளரான தினேஷ் ஏகநாயக்க கருத்து தெரிவித்தார்.
ஃபெஷன் பக் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரியான திருமதி. நதிஷா விக்கிரமதிலக்க இது தொடர்பில் மேலும் கூறுகையில், 'கோட்டை புகையிரத நிலையம் உண்மையிலேயே கொழும்பின் போக்குவரத்து கட்டமைப்பின் ஒரு தனித்துவச் சின்னமாகும். இந்த புனரமைப்புத் திட்டமும், ஃபெஷன் பக் நிறுவனமும் 2013 ஆம் ஆண்டில் நாங்கள் முதன்முதலில் இந்த முயற்சியை ஆரம்பித்த காலகட்டத்திலிருந்தே நீண்ட கால வரலாற்றைக் கொண்டவை,' என்று குறிப்பிட்டார்.
அறிவிப்பு பலகைகள், புகையிரதத்தில் ஏறும் நடைபாதை இலக்கங்கள், நேர அட்டவணைகள், டிக்கெட் கருமபீட பலகைகள், வரைபடங்கள் மற்றும் தினசரி பயணிகளுக்கு உதவும் ஏனைய பெயர் மற்றும் திசை வழிகாட்டல் பலகைகளை நிறுவி, பேணிப் பராமரிக்கும் பொறுப்பை ஃபெஷன் பக் பொறுப்பேற்றுக்கொண்டது. நிலையத்தை புதுப்பொலிவுடன் மேம்படுத்துவதற்காக மொத்தத்தில், சுமார் 150 பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
நிறுவனம் பல புனரமைப்பு செயற்திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது, குறிப்பாக களுபோவிலை வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் கொழும்பு கண் வைத்தியசாலை ஆகியவற்றில் உள்ள பல சிகிச்சை விடுதிகளின் புனரமைப்பு செயற்திட்டங்களும் இதில் அடங்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago