2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

oDoc 1 மில். அமெ.டொ.களை திரட்டல்

S.Sekar   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு சேவை வழங்குநரான oDoc, சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முன்-தொடர் நிதித் திரட்டலினூடாக 1 மில். அமெ. டொலர்களை திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னைய மதிப்பீட்டை விட இரு மடங்கு அதிகமான நிதியளிப்பாக இது அமைந்திருந்தது.

ஏற்கனவே காணப்படும் முதலீட்டாளர்களான Techstars இனால், சிலிக்கன் வெலி பகுதியைச் சேர்ந்த மூலதன நிறுவனங்களான Hustle Fund மற்றும் Unpopular Ventures இனூடாக இந்த நிதித் திரட்டலை மேற்கொள்ள உதவியிருந்தது. இதர குறிப்பிடத்தக்க முதலீட்டாளர்களில் Cherif Habib (கனேடிய ஆரம்ப நிலை தொலைபேசி ஊடாக மருத்துவ சேவைகளை வழங்கும் நிறுவனமான  Dialogue இன் இணை ஸ்தாபகர்),  Vir Kashyap (Babajob இன் இணை ஸ்தாபகர்) மற்றும் LPs Bill & Leonard Lynch ஆகியோர் அடங்கியிருந்தனர்.  நிறுவனத்தின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்பதுடன், பிராந்தியத்தின் சுகாதார பராமரிப்பு மற்றும் காப்புறுதிப் பிரிவுகளில் ஒப்பற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கும்.

2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம், நோயாளர்களை வைத்தியர்களுடன் வீடியோ ஆலோசனைகள் முறையினூடாக இணைத்து வீட்டிலிருக்கும் போதே நோய் இனங்காணல் மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகம் போன்றவற்றை மேற்கொள்ள உதவியிருந்தது. 2020 ஆம் ஆண்டில் நிறுவனம் தனது வருமானத்தை ஐந்து மடங்கினால் அதிகரித்திருந்ததுடன், ஆரோக்கியமான அலகு பொருளாதாரங்களை பேணியிருந்தது. தொற்றுப் பரவல் காரணமாக இந்த வளர்ச்சியைப் பதிவு செய்ய முடிந்திருந்தது. இக்காலப்பகுதியில் நோயாளர்கள் மற்றும் சிகிச்சை வழங்குவோர் பெருமளவில் oDoc கட்டமைப்பை பயன்படுத்தியதை அவதானித்திருந்தது. முடக்க நிலையின் போது, அவசரமற்ற மருத்துவ தேவைகளுக்கு தொலைபேசியினூடாக ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறை மாத்திரமே அமுலில் இருந்தது.

தொற்றுப் பரவலின் போது, சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கையாக, சுகாதார அமைச்சின் சார்பாக இலங்கையின் தேசிய மருத்துவ கட்டமைப்பை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக, நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தவொரு இலங்கையருக்கும் இலவச மருத்துவ ஆலோசனையை பெற்றுக் கொள்வதற்கு வசதியை ஏற்படுத்தியுள்ளது.

Hustle Fund இன் முகாமைத்துவ பங்காளர் சியான் கோ நிதியளிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “ஹேஷான் மற்றும் oDoc அணியினருக்கு பக்கபலமாக அமைந்திருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன், இவர்கள் ஊக்கம் மற்றும் மூலதன வினைத்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். நாம் இன்றைய காலகட்டத்தில் எதிர்கொள்ளும் மிகவும் முக்கியமான பிரச்சனைகளுக்கு உரிய காலத்தில் சுகாதார பராமரிப்பு தீர்வுகளை சகாயமான முறையில் பெற்றுக் கொள்வதற்கு தீர்வை வழங்குவதாக oDoc அமைந்துள்ளது. டிஜிட்டல் சுகாதார தீர்வுகளை பயன்படுத்துவதற்கு நுகர்வோரின் ஆர்வம் என்பது கொவிட்-19 தொற்றுப் பரவலின் போது அதிகரித்துள்ளதுடன், வளர்ச்சிக்கான பல வழிமுறைகளை நாம் இனங்கண்டுள்ளோம்.” என்றார்.

oDoc இன் இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஹேஷான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “oDoc ஐச் சேர்ந்த நாம் உயர் தரம் வாய்ந்த மருத்துவ பராமரிப்புகளை உலகளாவிய ரீதியில் அணுகக்கூடிய வகையில், சகாயமாகவும் பிரத்தியேகமாகவும் வழங்குகின்றோம். அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மாற்றமடைவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், ஆரம்ப நிலை என்பதிலிருந்து, சிலிக்கன் வெலியின் சிறந்த நிறுவனங்களின் ஊக்குவிப்பைக் கொண்டுள்ளதையிட்டும் வியப்படைகின்றோம்.” என்றார்.

தொற்றுப் பரவலுடன், தொலைபேசி ஊடாக மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்வது அதிகரித்துள்ளது. இதனால் காத்திருக்கும் தேவை மற்றும் நோயாளர் சௌகரியம் போன்றன மேம்படுத்தப்பட்டுள்ளன. நேரடியாக சுகாதார பராமரிப்பு பகுதிகளுக்கு விஜயம் செய்வதில் காணப்படும் அச்சம் காரணமாக, நோய் நிலைமைகள் மோசமடைவதை தவிர்த்துக் கொள்ளவும் இந்த முறை உதவியாக அமைந்துள்ளது.

oDoc தற்போது 1000க்கும் அதிகமான வைத்திய பங்காளர்களை கொண்டுள்ளதுடன், இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் மற்றும் கம்போடியா ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த 65 க்கும் அதிகமான நாடுகளின் 200,000க்கு அதிகமான பகுதிகளை உள்வாங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .