Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
S.Sekar / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, தனது mRetail தீர்வின் அறிமுகத்தினூடாக, நாட்டின் விற்பனைப் பிரிவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முன்வந்துள்ளது. இந்தக் கட்டமைப்பினூடாக, விற்பனையாளர்களுக்கு தமது வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு வெகுமதிகள் நிறைந்த சொப்பிங் அனுபவத்தை டிஜிட்டல் கட்டமைப்பினூடாக பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
வாடிக்கையாளர்களுக்கு இந்த உயர் தர அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ள விற்பனையாளர்களில் ஒன்றாக Edinborough இன் Grandeur -பல்பொருள் விற்பனைத் தொடர் அமைந்துள்ளது. புரட்சிகரமான mRetail கட்டமைப்புடன் இணைந்து கொண்ட புதிய விற்பனையாளராக இது அமைந்துள்ளது. mRetail உடன் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற பாதுகாப்பான கொடுப்பனவுகள் மற்றும் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள், mCash ஊடாக பொருட்கள் மற்றும் சேவைகள் கொள்வனவு போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.
mRetail கட்டமைப்பில் காணப்படும் சில பிரத்தியேகமான உள்ளம்சங்களில், Cloud செயற்படுத்தப்பட்ட விற்பனை POS இயந்திரங்கள், பிரத்தியேகமான mCash Total Digital Banking Payment Gateway தீர்வுகள், வர்த்தக நாம ஊக்குவிப்புகளுக்காக டிஜிட்டல் காட்சிப்படுத்தல்கள் மற்றும் வாடிக்கையாளர் லோயல்டி கட்டமைப்பு நிர்வாகத் தீர்வுகள் போன்றன அடங்கியுள்ளன. mRetail செயற்படுத்தப்பட்ட சகல விற்பனையகங்களிலும், SLT-MOBITEL இன் Club Magnet வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரத்தியேக சேவைகளை வழங்கும் வகையில் இந்தச் சேவை நீடிக்கப்பட்டுள்ளது. SLT-MOBITEL இணைப்புத்திறன் சேவைகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சுய செயற்படுத்தல் SIM சேவைகளுடன் உடனடியாக இணைப்பை ஏற்படுத்தும் வசதி வழங்கப்படுகின்றது.
மேலும், mRetail கட்டமைப்பின் வலுவை பயன்படுத்த தீர்மானிக்கும் விற்பனையாளர்களுக்கு, பிரிவு அடிப்படையிலான விற்பனை சந்தைப்படுத்தல், mAgents ஊடாக Ecochannelling பல்பொருள் விநியோகம் போன்றவற்றின் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago