Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுப் பரவலின் பின்னர் வாகன உதிரிப்பாக விற்பனையாளர்களுக்கு எழுந்துள்ள நிதிச் சவால்களுக்கு முகங்கொடுக்க உதவும் வகையில், தமது தளத்தில் மோட்டார் சைக்கிள்/ஸ்கூட்டர் (motorbikes/scooters), முச்சக்கரவண்டி (three-wheelers) மற்றும் மோட்டார் வாகன உதிரிப்பாகங்களுக்கு (auto parts) இலவச விளம்பரப்படுத்தலை வழங்க முன்வந்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபரில் ikman.lk தளத்தில் விளம்பரத்தை பதிவதற்கான கட்டணத்திற்கு விலக்களிக்க முன்வந்திருந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக, இந்த வசதியையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
கொள்வனவாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என இரு தரப்பினரைப் பொறுத்தவரையிலும், இலங்கையின் மிகப் பாரிய இணையத்தள சந்தையான ikman.lk, தன் தளத்தில் 3,000 இற்கும் மேற்பட்ட விற்பனையகங்களைக் கொண்டுள்ளது. மாதமொன்றில் வாகனங்கள் தொடர்பான 60,000 இற்கும் மேற்பட்ட நேரடி விளம்பரங்களையும் தன் தளத்தில் அது கொண்டுள்ளது.
“இலங்கையில் மோட்டார் வாகனத் தொழிற்துறை தொற்றுநோய் நிலைமைக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், வாகனம் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிச்சயமற்ற காலகட்டத்தில் அவர்கள் தமது முயற்சிகளை மீளவும் ஆரம்பிக்க தலைப்பட்ட ஒரு சமயத்தில் தொற்றுநோயின் இரண்டாவது அலை மீண்டும் அவர்களை துன்பத்தில் தள்ளியுள்ளது. அவர்களில் பலரும் மிக நீண்ட காலமாக எம்முடன் வர்த்தகரீதியாக தொடர்புகளைப் பேணி வந்துள்ள நிலையில், தமது துன்பங்கள் தொடர்பில் எம்மைத் தொடர்பு கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில், நெருக்கடியிலிருந்து அவர்கள் மீள்வதற்கு முக்கிய உதவி தேவை என்பதை நாம் உணர்ந்து கொண்டோம்,” என்று ikman.lk இன் வாகனப் பிரிவின் பணிப்பாளரான றிமாஸ் மர்சூக் குறிப்பிட்டார். இந்த தளத்தை பயன்படுத்தும் விற்பனையாளர்களுக்கு இலவச விளம்பரப்படுத்தல் வாய்ப்பினை அறிமுகப்படுத்துவது விளம்பரப்படுத்தல் தொடர்பான செலவுகள் அவர்களுக்கு ஏற்படுத்தும் கூடுதல் அழுத்தங்களிலிருந்து அவர்கள் தம்மை விடுவித்துக்கொள்ள உதவும் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
இந்த விசேட சலுகையின் கீழ் மாதந்தோறும் மோட்டார் சைக்கிள்/ஸ்கூட்டர் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு ஒரு இலவச விளம்பரமும் (free ad listing), மோட்டார் வாகன உதிரிப்பாகங்களுக்கு இரு இலவச விளம்பரப்படுத்தல்களும் கிடைக்கப்பெறுகின்றன.
மேலும், இப்பிரிவிற்கு மாத்திரம் பிரத்தியேகமாகக் கிடைக்கும் வகையில் சலுகைக் கட்டண அடிப்படையில் அவசர இணைத் திட்ட (Urgent Bundle) ஊக்குவிப்பு மூலம் விளம்பரப்படுத்துகின்றவர்களுக்கு தமது விளம்பரத்தினூடாக விரைவான விற்பனை மற்றும் அதிகமான பாவனையாளர்கள் விளம்பரத்தைக் காணும் வகையில் அதன் சிறப்பான ஸ்தானம் ஆகியனவும் கூடுதல் நன்மைகளாகக் கிடைக்கப்பெறுகின்றன. அவசர இணைத்திட்ட தெரிவானது விளம்பரப்படுத்துகின்றவர் தமது விளம்பரப் பதிவிடலின் போது ‘அவசரம்’ என்ற இணைப்பைக் காண்பிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் விளம்பர விபரங்கள் பக்கத்தில் (Ad Details Page) சிறந்த தோற்ற ஸ்தானத்துடன், மூன்று நாட்களுக்கு விளம்பரப்படுத்த முடியும். அத்துடன் விளம்பரத்தின் திறனை அல்லது பலனை (ad performance page) ஆய்வு செய்வதற்கு இலவச வாய்ப்பும் வழங்கப்படும்.
கடந்த ஆண்டில் தளபாடம், இலத்திரனியல் சாதனங்கள், மடிக்கணினி, மொபைல், செல்லப்பிராணிகள், இசைக் கருவிகள் மற்றும் நானாவிதப் பொருட்கள் தொடர்பில் தொற்றால் பாதிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு இலவசமாக விளம்பரப்படுத்தும் வாய்ப்பினை ikman.lk அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago