Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை
Freelancer / 2024 ஜனவரி 19 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி தனது ‘eSlip’ செயலியில் புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இவ்வகையான பயன்பாட்டைக் கொண்ட முதல் செயலி இதுவாகும்.
டிஜிட்டல் வங்கியிச் சேவையின் மூலம் நிலைபெறுதகு தன்மையை மேம்படுத்தும் நோக்கில், eSlip செயலியானது வாடிக்கையாளர்களுக்கு கிளைக்குச் செல்லும் போது இலத்திரனியல் முறையில் வைப்பு படிவத்தை தொலைபேசியில் பூர்த்தி செய்வதன் மூலம் பண வைப்பு செயல்முறையை சீரமைக்க உதவுகிறது. வங்கிக்கு செனÊறவுடனÊ, வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த கணக்குகள் அல்லது மற்ற கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பணத்தை வைப்பதற்கு நேரடியாக பணம் வைப்பு செய்யும் கவுண்டருக்கு செல்லலாம்.
இந்த சமீபத்திய மேம்படுத்தலில் செயல்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் கவுன்டர் ஊழியர்களுக்கு வசதியை மேம்படுத்தி, புதுமையான பசுமை-எதிர்கால முன்முயற்சியில் இணைக்கும் வகையில், வங்கியில் பணம் வைப்புச் செய்வதை வேகமாகவும் எளிதாகவும் முன்னெடுக்க உதவுவதாக வங்கி தெரிவித்துள்ளது.
ஒரு புதிய அடையாள (ID) ஆவணச் சரிபார்ப்பு அம்சமானது, ஒரு வாடிக்கையாளர் ஏற்கனவே வங்கியுடன் உறவை பேணுகின்றாரா என்பதைச் அறிந்துகொள்ள, தேசிய அடையாள அட்டை இலக்கங்களை சரிபார்க்க இந்த செயலி இயக்கப்படுகிறது. இருப்பினும், இந்த செயலியைப் பயன்படுத்த, கொமர்ஷல் வங்கியில் கணக்கைப் பராமரிக்கவேண்டிய அவசியமில்லை.
ஒரு ‘eSlip Groups’ அம்சத்தின் அறிமுகம், செயலியின் பயனர்கள் ஒரு QR குறியீட்டின் கீழ் 10 eSlips வரையிலான குழுக்களை உருவாக்குவதை சாத்தியமாக்குகிறது. ஒரே QR குறியீட்டின் கீழ் பல கணக்குகளுக்கு வைப்புச் செய்ய வேண்டிய வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் வசதியளிப்பதாக வங்கி தெரிவித்துள்ளது.
மற்றொரு புதிய அம்சம், eSlip பயனர்கள் முடிக்கப்பட்ட அனைத்து eSlip பரிவர்த்தனைகளின் PDF பற்றுச்சீட்டுக்களை உருவாக்கி அவற்றை மொபைல் சாதனம் ஆதரிக்கும் சமூக ஊடக தளங்களான WhatsApp, Email மற்றும் Viber போன்றவற்றில் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago