Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2023 மே 22 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்திய முன்பதிவு மற்றும் டிஜிட்டல் வாழ்க்கைமுறை சேவைகள் வழங்குநரான eChannelling PLC, 2022 நிதியாண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது.
இலங்கையர்களின் டிஜிட்டல் வாழ்க்கைமுறை சேவைகளிலும், சுகாதாரப் பராமரிப்புத் துறையிலும் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும் இலக்குடன் இயங்கும் eChannelling, தொழில்நுட்பம் மற்றும் திறமை ஆகியவற்றை ஒன்றிணைப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதனை உறுதி செய்யும் வகையில் வருமான வளர்ச்சி, தந்திரோபாய பங்காண்மைகளில் அதிகரிப்பு மற்றும் சகல பங்காளர்களுக்கும் பெறுமதியைப் பெற்றுக் கொடுக்கும் திறன்களில் விருத்தியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருந்தது.
2022 ஆம் ஆண்டிலும், அதற்கு அப்பாலும் வளர்ச்சியை எய்தியுள்ள eChannelling, 2022 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. மொத்த வருமானம் ரூ. 221.5 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15% வளர்ச்சியாகும். பெரும்பொருளாதாரச் சவால்கள் நிலவிய காலப்பகுதியிலும் இந்த சிறந்த பெறுபேறுகளை எய்தியிருந்தமை விசேட அம்சமாகும். நிலைபேறான, இலாபகரமான வியாபாரம், ஆகியவற்றை வெளிப்படுத்தி தேறிய இலாபம் ரூ. 65.5 மில்லியனாக அதிகரித்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23%அதிகரிப்பாகும்.
மேலும், மொத்த சொத்துக்கள் வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்திருந்ததுடன், 2022 டிசம்பர் 31ஆம் திகதியன்று இந்தப் பெறுமதி ரூ. 555 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ. 464 மில்லியனாக காணப்பட்டதுடன், 20% வளர்ச்சியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சவால்கள் நிறைந்த சந்தைச் சூழலை பிரதிபலிக்கும் வகையில், eChannelling இன் தொழிற்பாட்டு இலாபம் ரூ. 44.5 மில்லியனாக குறைந்திருந்தது. முன்னைய ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ. 55.9 மில்லியனாக பதிவாகியிருந்தது. விற்பனை மற்றும் விநியோக செலவுகளில் 39% அதிகரிப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளில் 32% அதிகரிப்பு ஏற்பட்டமை இதற்கு பிரதான காரணிகளாக அமைந்திருந்தன.
குறுங்கால முதலீடுகளில் நிறுவனம் 13.8% உயர்வை நிறுவனம் பதிவு செய்திருந்தது. வட்டி வருமானத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததுடன், அதன் இலாபகரத்தன்மை மற்றும் நிதி உறுதித்தன்மை போன்றவற்றுக்கு அனுகூலமளிப்பதாக இவை அமைந்திருந்தன. தொற்றுப் பரவலின் பின்னரான சூழலில், டிஜிட்டல் வாழ்க்கைமுறை சேவைகள் வழங்கலில் தனது செயற்பாடுகளை மேலும் விஸ்தரிக்கும் முயற்சிகளில், தனது சேவை வழங்கல்களை eChannelling பன்முகப்படுத்தியிருந்ததுடன், நவீன டிஜிட்டல் தீர்வுகளினூடாக பொது தனியார் நிறுவனங்களை மாற்றியமைப்பதற்கான ஆற்றலையும் வெளிப்படுத்தியிருந்தது.
நோக்கங்களுடன் மீளமைத்தல் மற்றும் பன்முகப்படுத்தல் போன்றவற்றுக்கமைய, 2022 ஆம் ஆண்டில் eChannelling, வெளி விவகார அமைச்சுடன் வெற்றிகரமாக கைகோர்த்து, ஆவண உறுதிப்படுத்தல்களை மேற்கொள்வதற்கு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட முன்பதிவுகளை மேற்கொள்ளும் வசதிகளை வழங்கியிருந்தது. முன்னோடித் திட்டம் எனும் வகையில், இந்தத் தீர்வினூடாக, அத்தியாவசியத் தேவை நிவர்த்தி செய்யப்பட்டதுடன், மக்களுக்கு வலுவூட்டப்பட்டதுடன், சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்பட்ட சிக்கல் நிலைகளை இல்லாமல் செய்யவும் முடிந்தது. மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஈடுபடுத்துவதில் தனது ஆற்றலை வெளிப்படுத்தி, eChannelling இனால், உள்நாட்டிலுள்ள அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் நோயாளர்களுக்கு வைத்தியர்களை ஒன்லைனில் பதிவு செய்து ஆலோசனை பெறக்கூடிய புதிய ‘One Touch Tele Channelling ஊடான சேவையும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்தச் சேவையினூடாக, நோயாளர்களுக்கு பெருமளவு சௌகரியம் சேர்க்கப்படுவதுடன், தமது இருப்பிடத்திலிருந்தவாறே அவசியமான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதுடன், தமது வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ளவும் முடிந்துள்ளது.
இரண்டு தசாப்த கால பயணத்தில், eChannelling அதிகளவு நாடப்படும் டிஜிட்டல் வாழ்க்கைமுறை மற்றும் சுகாதார பராமரிப்பு சேவைகள் வழங்குநரில் முன்னோடியாகத் திகழ்கின்றது. தனது தந்திரோபாய பங்காண்மைகள் மற்றும் புத்தாக்கமான சேவை வழங்கல்கள் போன்றவற்றினூடாக நிறுவனம் வெற்றிகரமாக செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், அண்மையில் மேற்கொண்டிருந்த டிஜிட்டல் வாழ்க்கைமுறை சேவைகள் விஸ்தரிப்பினூடாக, eChannelling தனது சேவைகளை மேலும் வியாபித்து, வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற சௌகரியத்தை வழங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
40 minute ago
2 hours ago