Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மார்ச் 28 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
eChannelling PLC, அண்மையில் நடைபெற்ற சுகாதார பராமரிப்பு கண்காட்சி நிகழ்வான Medicare 2025இல் விசேடமான வலுவூட்டப்பட்ட சுகாதார AI-தொழினுட்பங்களை அறிமுகம் செய்திருந்தது. இந்த நிகழ்வு கொழும்பு BMICH இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Medicare 2025 இன் உத்தியோகபூர்வ டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு பங்காளர் எனும் வகையில், சுகாதார பராமரிப்பு அணுகலை மாற்றியமைத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக eChannelling இனால் பல புத்தாக்கங்கள் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. அதில், உயரம்சங்கள் படைத்த AI-வலுவூட்டப்பட்ட முக ஸ்கான் செய்யும் கட்டமைப்பும் அடங்கியிருந்தது. சில வினாடிகளில் உடலாரோக்கியத்தை பகுப்பாய்வு செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த நவீன அம்சங்களைக் கொண்ட தொழினுட்பங்கள் SLT-MOBITEL தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வாவினால் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. அதனூடாக நாட்டினுள் டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு AI மேம்படுத்தலுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது.
eChannelling இன் புரட்சிகரமான முக ஸ்கான் தொழினுட்பத்தின் விளக்கத்தை சுகாதார அமைச்சர் கௌரவ. நளிந்த ஜயதிஸ்ஸ பெற்றுக் கொண்டார். இதனூடாக, நாடித் துடிப்பு, குருதி அழுத்தம் (systolic & diastolic), இருதய அழுத்த நிலைகள், இதய துடிப்பு மாற்றம் (HRV) மற்றும் சுவாசிக்கும் போக்குகள் அனைத்தும் எளிமையான முக ஸ்கான் ஊடாக மேற்கொள்ளப்படும்.
மூன்றுநாள் கண்காட்சி, 14ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டதுடன், eChannelling இன் சில இதர புத்தாக்கமான தீர்வுகளின் உத்தியோகபூர்வ அறிமுகத்துக்கும் வழிகோலியிருந்தது. The eHospital Virtual Consultation என்பது பரந்த தொலைபேசி ஊடாக மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்ளும் வசதியாக அமைந்திருப்பதுடன், நோயாளர்களுக்கு தமது இருப்பிடங்களில் சௌகரியமாக இருந்தவாறே, வீடியோ ஆலோசனைகளினூடாக சுகாதார பராமரிப்பு சேவை வழங்குனர்களுடன் தொடர்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது. மேலும், eChannelling இனால் அதன் Smart Ring Health Monitoring நவீன அணியக்கூடிய சாதனம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதனூடாக தொடர்ச்சியாக 24/7 சுகாதார கண்காணிப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. நிறுவனத்தினால் ePremium Membership எனும் மேம்படுத்தப்பட்ட சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் பிரத்தியேகமான திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. eChannelling காட்சிகூடத்துக்கு விஜயம் செய்தவர்கள், ஈடுபாட்டுடன் கூடிய புதிர் போட்டியில் பங்கேற்றிருந்ததுடன், வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் மற்றும் இலவசமாக ePremium memberships வழங்கப்பட்டிருந்தன.
Medicare 2025 இல் eChannelling பங்கேற்றிருந்ததனூடாக, சுகாதார புத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும், மருத்துவ சேவைகளை பெருமளவு அணுகச் செய்வதற்கும் AI-வலுவூட்டப்பட்ட தொழில்நுட்பத்தை ஒன்றிணைப்பது தொடர்பில் உறுதியான அர்ப்பணிப்பை eChannelling வெளிப்படுத்தி, அனைத்து இலங்கையர்களுக்கும் வினைத்திறனான, மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க மருத்துவ சேவைகளை வழங்குவதில் பங்களிப்பு வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு தமது இருப்பிடங்களிலிருந்தவாறு, AI-வலுவூட்டப்பட்ட சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு வசதியளிப்பதுடன், நடமாடும் சுகாதார பராமரிப்பு கண்காணிப்பில் காணப்பட்ட பெருமளவு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியிருந்தது.
வாழ்க்கையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் இரு தசாப்த கால பூர்த்தியை eChannelling PLC கொண்டாடுவதுடன், விறுவிறுப்பான எதிர்காலத்தை நோக்கி பயணித்த வண்ணமுள்ளது. நவீன தீர்வுகள் மற்றும் உயர்தர சேவை வழங்கல்கள் போன்றவற்றினூடாக, டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு மற்றும் வாழ்க்கைமுறைகளில் பெருமளவு மூலோபாய மாற்றங்களை ஏற்படுத்தி, தேசத்தின் டிஜிட்டல் சூழல்கட்டமைப்பை மாற்றியமைப்பதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. SLT-MOBITEL இனால் eChannelling இற்கு வலுவூட்டப்படுவதுடன், தேசத்தின் சுகாதார பராமரிப்பின் டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் வளமூட்டலுக் பெருமளவு பங்களிப்பு வழங்கியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago