Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 மார்ச் 04 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
Zesta Tea, நாட்டின் தேனீர் பிரியர்களுக்கு முத்திரையிடப்பட்ட, உயர்தர மற்றும் ஏற்றுமதி செய்யக்கூடிய தேயிலையை அறிமுகப்படுத்திய இலங்கையின் முதல் வர்த்தக நாமம், தரம், சுவை மற்றும் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இலங்கை தேயிலை தொழிலில் நிகரற்ற மேன்மை சமீபத்தில் கொண்டாடப்பட்டது. Zesta பிராண்டின் வரலாற்றில் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில் அண்மையில் Zesta இன் ஊழியர்கள் மற்றும் Sunshine Holdings இன் சிரேஷ்ட நிர்வாகத்தின் பங்கேற்புடன் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.
புத்தாக்கம் மற்றும் அதிநவீனத்துடன் உயர்தர தேயிலையை இலங்கை சந்தைக்கு வழங்குவதற்கான நற்பெயருடன், Zesta 1998 ஆம் ஆண்டு முதல் தடவையாக இலங்கையர்களுக்கு 100% Broken Orange Pekoe Fannings (BOPF) தனித்துவமான கலவையை அறிமுகப்படுத்தியது, இது சர்வதேச சந்தைக்கு மாத்திரமே சிறந்த தேநீர் என்ற கருத்திற்கு சவாலை ஏற்படுத்தியது. பாரம்பரிய அணுகுமுறைகளில் இருந்து விலகி, துணிச்சலான புதிய உத்திகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் இதயங்களையும் மனதையும் நெருங்கி வருவதன் மூலம், இலங்கையர்களுக்கு மிக உயர்ந்த தரமான தேயிலையை வழங்குவதில் Zesta இன் வர்த்தக நாம அர்ப்பணிப்பு, அதை பிரபலமான வீட்டுப் பெயராக மாற்றியுள்ளது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷ்யாம் சதாசிவம் கூறியதாவது: “இருபத்தைந்து ஆண்டுகளின் சிறப்பைக் கொண்டாடும் இந்த வேளையில், இந்த வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 1998 ஆம் ஆண்டு Zesta பிராண்டின் அறிமுகத்திற்கு முன்னோடியாக இருந்த மற்றும் Zesta பிராண்டை புதிய உயரத்திற்கு தொடர்ந்து வழிநடத்திய விஷ் கோவிந்தசாமியின் ஈடு இணையற்ற தலைமைத்துவம் மற்றும் எங்கள் ஆர்வமுள்ள குழு மற்றும் விசுவாசமான வாடிக்கையாளர்களின் தளராத ஆதரவின் காரணமாக இந்த மைல்கல்லை எங்களால் எட்ட முடிந்தது." என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago