Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 04 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
Viber தனது பத்து வருட பூர்த்தியை முன்னிட்டு தனது சேவைகளை மேலும் விஸ்தரித்து Chatbot கொடுப்பனவு முறைமையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் முதல் சந்தையாக உக்ரேன் அமைந்துள்ளதுடன், ஏனைய சந்தைகளிலும் இந்தச் சேவையை 2021 இல் அறிமுகம் செய்ய Viber திட்டமிட்டுள்ளது. இலங்கையின் பாவனையாளர்களுக்கும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பாவனையாளர்களுக்கும் இந்தச் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என Viber அறிவித்துள்ளது. பொருள்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்ய Google Pay அல்லது அதற்கு நிகரான மொபைல் வொலட் ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளது.
தகவல் பரிமாறல், சமூக கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பாவனையாளர்கள் emojis, gifs, வீடியோ அழைப்புகளுக்கு மேலாக அம்சங்களை எதிர்பார்க்கின்றனர். 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து 64% இளம் பராயத்தினர் P2P transfer தீர்வுகளைக் கோரி வருகின்றனர். இந்தப் பெறுமதி நாளாந்தம் அதிகரித்துள்ளதுடன், தொற்றுப் பரவல் காரணமாக இந்தத் தீர்வுகளை அறிமுகம் செய்வதற்கான தேவையும் அதிகரித்துள்ளது.
சகல பாவனையாளர்களின் தேவைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய கட்டமைப்பை நிறுவனம் கட்டியெழுப்பிய வண்ணமுள்ளது. இந்தத் தேவையை உணர்ந்து, Viber இனால் அதன் கட்டணம் செலுத்தும் வசதிச் சேவைகள், நிதிச் சேவைகள் ஆகியவற்றுக்கு விஸ்தரிப்பது தொடர்பில் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Viber இன் Chatbot கொடுப்பனவு உள்ளம் சத்தினூடாக பாவனையாளர்களுக்குப் பொருள்கள், சேவைகளை பாதுகாப்பான முறையில் நேரடியாக கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். பாவனையாளரின் வங்கிக் கணக்கு இதற்கு பொருந்தும் வகையில் அமைந்திருப்பின், அவர்களின் கிரெடிட் அல்லது டெபிட் அட்டை தகவல்களை ஸ்மார்ட்ஃபோன் வொலட்களில் பதிவு செய்து Viber இன் application programming interface (API) ஊடாக கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.
விற்பனையாளர் கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தால், Viber இல் chatbot செயற்படுத்தி கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
Rakuten Viber இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜமெல் அகாவுவா கருத்துத் தெரிவிக்கையில், “தகவல் பரிமாற்றம் எனும் நிலையிலிருந்து சர்வதேச மட்டத்தில் Viber ஐ அப்பால் கொண்டு செல்ல முடிந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். பாவனையாளர்கள்களை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது பிரத்தியேகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. தகவல் பரிமாற்றத்துக்கு மாத்திரமன்றி, டிஜிட்டல் தொடர்பாடல்களில் ஏனைய பிரிவுகளில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. பாவனையாளர்களுக்கு பாதுகாப்பான மாற்று கொடுப்பனவு முறையை அணுகும் வாய்ப்பை நாம் உறுதி செய்துள்ளோம்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
39 minute ago
1 hours ago