2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

Techno Sri Lanka 2023 இல் SLT-MOBITEL 5G தொழில்நுட்பம் பரீட்சார்த்தம்

Freelancer   / 2023 டிசெம்பர் 04 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, நவீன ஹைபிரிட் மாதிரி (SA+NSA) 5G தொழில்நுட்பத்தை இலங்கையில் முதன்முறையாக பரீட்சித்திருந்தது. அண்மையில் நடைபெற்ற Techno 2023 கண்காட்சியில் இந்த பரீட்சார்த்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது.

இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தினூடாக, 5G இன் பரந்தளவு அப்ளிகேஷன் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்திருந்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு 5G இன் முழுமையான அனுபவத்தை பெற்றுக் கொள்வதற்கு ஒப்பற்ற வாய்ப்பையும் வழங்கியிருந்தது. 5G பிரயோகத்துடன், Ultra-Reliable Low Latency Communication (URLLC) ஐ பயன்படுத்தி முக்கியமான அப்ளிகேஷன்களை செயற்படுத்த SLT-MOBITEL எதிர்பார்த்துள்ளதுடன், மேம்படுத்தப்பட்ட latency உடன், உயர்ந்த வாடிக்கையாளர் கேள்விகளை நிவர்த்தி செய்யவும், Network Slicing ஐ ஈடுகொடுக்கவும், உயர்ந்த சேவைத் தர உறுதிப்பாடு (QoS), Edge கணனியல் மற்றும் பல இதர நவீன செயற்பாட்டு வசதிகளை வழங்கும்.

நவீன 5G (SA+NSA) ஹைபிரிட் வலையமைப்பின் அறிமுகத்தினூடாக, வணிக நோக்கத்துக்காக 5G வலையமைப்பு அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர், 4G இலிருந்து 5G க்கு மாறுவதற்கான கட்டமைப்பு தயார்நிலை உறுதி செய்யப்பட்டிருந்தது.

5G தொழில்நுட்பத்தின் பரந்தளவு ஆற்றல்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில், SLT-MOBITEL தொடர்ந்தும் தனது முன்-வணிக 5G பரீட்சார்த்த வலயங்களை பிரதான நகரங்களில் விஸ்தரித்த வண்ணமுள்ளது. இதில் கொழும்பு, கண்டி, அனுராதபுரம், காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகியன அடங்கியுள்ளன. இதனூடாக, எதிர்காலத்தில் 5G சேவைகள் அதிகளவு சகாயத்தன்மை மற்றும் அணுகக்கூடிய தன்மையை கொண்டிருப்பதற்கு வழியமைக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .