2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

TAGS விருதுகள் 2023 இல் ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி விருது சுவீகரிப்பு

Freelancer   / 2024 பெப்ரவரி 02 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரந்தளவில் அறியப்படும் மற்றும் நாட்டின் மிகவும் புத்தாக்கமானதும், நம்பிக்கையை வென்றதுமான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, காப்புறுதித் துறையில் சிறந்த வருடாந்த நிதி அறிக்கைக்கான (ரூ. 10 பில்லியன் வரை GWP) வெண்கல விருதை சுவீகரித்திருந்தது. TAGS விருதுகள் 2023 நிகழ்வில் தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் இந்த விருதை ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகனத்தினால் (CA ஸ்ரீ லங்கா) ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருதுகள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூரல், ஆளுகை மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றை பொருளாகக் கொண்டுள்ளது. நிதி, சூழல், சமூக மற்றும் ஆளுகை அறிக்கையிடல் ஆகியவற்றுக்காக கௌரவிக்கப்பட்ட ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் 2022 ஆம் ஆண்டின் நிதி அறிக்கை, ‘Strides for Multifaceted Growth’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

நிதிசார் மற்றும் நிதிசார் அறிக்கையிடல் அம்சங்களை உள்வாங்கி சிறந்த வருடாந்த நிதி அறிக்கைகளை வெளியிட்டிருந்தமைக்காக CA ஸ்ரீ லங்காவினால் கௌரவிக்கப்பட்ட பல முன்னணி கூட்டாண்மை, பல்தேசிய, சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சிகள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியும் உள்ளடங்கியிருந்தது. ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் தவிசாளர் ரமல் ஜாசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “ஒழுங்குபடுத்தல் தேவைகளை பின்பற்றுகின்றமைக்காக எமது முயற்சிகள் கௌரவிக்கப்பட்டு வெகுமதியளிக்கப்பட்டுள்ளமையை காண்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். அதனூடாக எமது ஒழுக்கமான, ஆளுகை, சூழல் மற்றும் இதர அர்ப்பணிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.” என்றார்.

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி. கெலும் சேனநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “நேர்மை மற்றும் வெற்றிகரமான செயற்பாடு ஆகியவற்றில் எமது நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு இந்த சாதனை சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்த பெருமைக்குரிய விருதை சுவீகரித்த தொடர்ச்சியான இரண்டாவது வருடமாக இது அமைந்துள்ளதுடன், ஒன்றிணைப்பு, சிறப்பு மற்றும் நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு படிகளிலும் கைகோர்ப்பு போன்ற எமது பிரதான பெறுமதிகளில் நாம் காண்பிக்கும் ஒப்பற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. எமது அணியினரின் அர்ப்பணிப்பான மற்றும் கடுமையான உழைப்பினால் இந்த கௌரவிப்பை எய்த முடிந்தது.” என்றார்.

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் நிதிக் கட்டுப்பாட்டாளர் எஸ்.எச். துல்ஞ்ஜித் கவீஷ கருத்துத் தெரிவிக்கையில், “எமது 2022 ஆம் ஆண்டின் வருடாந்த நிதி அறிக்கை இந்த பெருமைக்குரிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிப்பைப் பெற்றுள்ளமையை காண்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். வெறும் இலக்கங்களுக்கு அப்பால் இந்த கௌரவிப்பு நீடிக்கப்பட்டுள்ளதுடன், எமது நிறுவனம் முழுவதிலும் முன்னெடுக்கப்படும் ESG கட்டமைப்பில் காண்பிக்கும் ஒப்பற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.  இந்த ESG கொள்கைகளுக்காக அர்ப்பணிப்பு என்பது CA ஸ்ரீ லங்காவில் மதிப்பாய்வு செயன்முறையில் பிரதான அங்கமாக அமைந்திருப்பதுடன், எமது முயற்சிகளில் முக்கியத்துவத்தை மேலும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.” என்றார்.

காப்புறுதி பரவலாக்கத்தின் சிறந்த மூலோபாயங்களுக்காகவும் ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி அண்மையில் கௌரவிக்கப்பட்டிருந்தது.  இந்தியாவில் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 4ஆவது வளர்ந்து வரும் ஆசிய காப்புறுதி மாநாடு மற்றும் விருதுகள் 2023 நிகழ்வில் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .