Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஜூலை 22 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
Sunshine Holdings, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற CFA Society Sri Lanka Capital Market Awards நிகழ்வில் 'சிறந்த முதலீட்டு உறவுக்கான' (Mid to Large Market Capitalization Companies) தங்க விருதை வென்றது. இந்த மதிப்புமிக்க விருது Sunshine Holdingsஇன் எதையும் சமாளிக்கக்கூடிய தன்மை, வாய்ப்புகளை அடையாளம் கண்டு அவற்றைப் பயன்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் விதிவிலக்கான முதலீட்டு உறவுகளைப் பேணுதல் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 12 வருட Capital Market Awards நிகழ்வு வரலாற்றில் Sunshine Holdings நான்காவது தடவையாக இந்த விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பட்டய நிதி ஆய்வாளர்கள் சங்கம் (CFA Society Sri Lanka) ஏற்பாடு செய்த CFA Capital Market விருது வழங்கும் நிகழ்வானது அந்த சங்கத்தின் முக்கிய அங்கமாகும். 'அரச-தனியார் உறவின் பலம்' என்ற தொனிப்பொருளில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு இலங்கையின் தற்போதைய அரச-தனியார் கூட்டுறவின் நிலை மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தியது. சிறந்த சமபங்கு ஆராய்ச்சி குழு, சிறந்த சமபங்கு ஆராய்ச்சி அறிக்கை, சிறந்த கள ஆய்வு அறிக்கை, சிறந்த முதலீட்டு உறவுகள், சிறந்த அலகு நம்பிக்கை நிதி மற்றும் சிறந்த சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) அறிக்கையிடல் ஆகிய பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த முதலீட்டாளர் உறவுகளுக்கான CFA Capital Market விருதுகள் முதலீட்டாளர்களுடன் தீவிரமாக ஈடுபடும் நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன, முதலீட்டாளர்களுடன் திறந்த மற்றும் செயல்திறன் தொடர்புகளை ஊக்குவிக்கின்றன, மேலும் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டாளர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன மற்றும் நிர்வகிக்கின்றன என்பதில் உயர் தரம் மற்றும் பயனுள்ள நடைமுறைகளை ஊக்குவிக்கின்றன. நிறுவனங்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன, பெருநிறுவனம் முதல் நடுத்தர சந்தை மூலதன நிறுவனங்கள் மற்றும் சிறிய சந்தை மூலதன நிறுவனங்கள், அவற்றின் முதலீட்டு உறவு முறைகள் மற்றும் அவை எவ்வாறு பதிலளிக்கின்றன. பங்குத் தரகு நிறுவனங்கள், நிதி நிர்வாகிகள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களைக் கொண்ட ஆய்வாளர்கள் குழு நடத்திய விரிவான கணக்கெடுப்பின் மூலம் இந்த நிறுவனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நிறுவனங்கள் தங்கள் நிர்வகிப்பு எவ்வளவு அணுகக்கூடியது மற்றும் பதிலளிக்கக்கூடியது, அவர்களின் தகவல் வெளிப்படுத்தல்களின் தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை மற்றும் வெவ்வேறு பொருளாதார நிலைமைகளில் முதலீட்டு உறவுகளை எவ்வளவு சீராக நிர்வகித்தது ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த தங்க விருதை வென்றது, தொழில் தரத்தை உயர்த்துவதற்கும், இலங்கையின் மூலதனச் சந்தைகளில் சிறந்து விளங்குவதற்கும் Sunshine Holdingsஇன் வலுவான அர்ப்பணிப்புக்கு சிறந்த சான்றாகும். நான்கு தடவை தங்க விருதை வென்றது தவிர, நிறுவனம் இதற்கு முன்பு 2019 மற்றும் 2023 இல் வெள்ளி விருதுகளையும் 2015 இல் வெண்கல விருதுகளையும் வென்றுள்ளது.
இந்தச் சாதனை குறித்து கருத்து தெரிவித்த Sunshine Holdingsஇன் தலைமை வளர்ச்சி அதிகாரி (Chief Growth Officer) திரு. ஹிரான் சமரசிங்க, “CFA Capital Market விருது வழங்கும் நிகழ்வில் இந்த மதிப்புமிக்க தங்க விருதை வெல்ல முடிந்தமை பெரும் கௌரவமாகும். இந்த மதிப்பீடு, எங்கள் முதலீட்டாளர்களுடன் வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் செயலில்/செயல்திறன் வாய்ந்த தகவல் தொடர்புக்கான எங்கள் வலுவான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. Sunshineஇல் வலுவான முதலீட்டாளர் உறவுகள் எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் இந்த விருது எங்கள் முழு குழுவின் அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது. முன்னோக்கிச் செல்லும்போது, எங்கள் நடவடிக்கைகள் மற்றும் தகவல்தொடர்புகளில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும், முதலீட்டு நிறுவனங்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் உயர்ந்த தரத்தை தொடர்ந்து பராமரிக்கவும் நாங்கள் பணியாற்றுவோம்.” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
3 hours ago
4 hours ago
5 hours ago