2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

Sunshine Holdings PLC சிறுவர் தின கொண்டாட்டம்

Freelancer   / 2023 நவம்பர் 20 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

Sunshine Holdings PLC சர்வதேச சிறுவர்கள் தினத்தை அண்மையில் கொண்டாடியது. இந்த நிகழ்வு 16 வயதுக்குட்பட்ட SUN ஊழியர்களின் குழந்தைகளுக்கு சந்தோஷம் நிறைந்த தருணமாக இருந்தது. அவர்கள் நாள் முழுவதும் வேடிக்கை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

Sunshine Holdings PLC குழந்தைகளின் திறன் மற்றும் வாக்குறுதியின் மீது வலுவான நம்பிக்கை கொண்டுள்ளது, அவர்களை ஒரு ஆசீர்வாதமாகவும் பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையாகவும் கருதுகிறது. சர்வதேச சிறுவர்கள் தின கொண்டாட்டம் இந்த உறுதிப்பாட்டிற்கான ஒரு சான்றாக இருந்தது, பெற்றோர்களுடன் சேர்ந்து குழந்தைகள் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட நாளில் பங்கேற்க கூடினர்.

இந்த நிகழ்வு பல்வேறு வகையான நடவடிக்கைகளை உள்ளடக்கியிருந்ததுடன், ஒவ்வொரு குழந்தையும் விரும்பும் ஏதாவது ஒன்றைக் கண்டறியும் வகையில் உறுதி செய்தது. வண்ணமயமான முகச் சித்திரம் வரைதல் அமர்வுகளில் இருந்து மிகவும் கவனத்தை ஈர்க்கும் கலை, நடனம் மற்றும் பாட்டு போட்டிகள், உற்சாகமூட்டும் விளையாட்டுக்கள், ஒரு கவர்ச்சிகரமான மாயாஜால நிகழ்ச்சி மற்றும் ஒரு Fancy Dress போட்டி வரை, குழந்தைகள் பல்வேறு பொழுதுபோக்கு உலகை அனுபவித்து மகிழ்ந்தனர்.

இந்த சிறுவர் தின கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வாக கலை, பாடல் மற்றும் நடனப் போட்டிகளின் வெற்றியாளர்களை தெரிவு செய்து அவர்களுக்கு பரிசில் வழங்குதல் நடைபெற்றது, அங்கு திறமையான சிறுவர்கள் அவர்களது திறமைகள் மற்றும் படைப்பாற்றலுக்காக கௌரவிக்கப்பட்டனர்.

Sunshine Holdings PLC இல் இந்த சிறுவர்கள் தின கொண்டாட்டம், குழந்தைகளுக்கு ஆதரவான மற்றும் ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்கி, ஊழியர்களுடனான உறவை வலுப்படுத்த அமைப்பின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. இது உன்னதமான நினைவுகளை உருவாக்கி, எதிர்காலம் இந்த இளம், நம்பிக்கைக்குரிய தனிநபர்களுக்கு சொந்தமானது என்ற நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த ஒரு நாளாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .