Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2024 மே 17 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கின் இரம்மியமான கரையோரத்துக்கு முகப்பாகவும், மாலைதீவுகளின் Sun SIyam Resorts இன் அங்கமுமான Sun SIyam பாசிக்குடா, இன்றும் (17), நாளையும் (18) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சஞ்சாரக்க உதாவ வர்த்தக கண்காட்சியில் தனது அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில், C169 மற்றும் C176 ஆகிய இணைந்த காட்சிகூடங்களில் Sun SIyam பாசிக்குடா தனது பிரசன்னத்தைக் கொண்டிருக்கும். வருடாந்தம் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பது வழமை.
Sun Siyam பாசிக்குடாவினால் சொகுசான தங்குமிட வசதிகள், சிறந்த உணவருந்தல் அனுபவங்கள் மற்றும் புத்துணர்வூட்டும் ஸ்பா சிகிச்சைகள் போன்றன வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளன. ஐந்து நட்சத்திர ஹோட்டலில், 34 இடவசதிகளைக் கொண்ட ஒன்று முதல் இரண்டு படுக்கையறைகள் பூந்தோட்டம் மற்றும் கடற்கரையை முகப்பாகக் கொண்ட பெவிலியன்களைக் கொண்டு அமைந்துள்ளன. சிறந்த உள்ளக காட்சியமைப்புகள், வர்ண அமைப்புகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
Sun Siyam பாசிக்குடாவில் தங்கியிருப்பது என்பது அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அனுபவத்தை வழங்குகின்றது. மாபெரும் சாகச அனுபவம், கலாசார அம்சங்கள் மற்றும் பிரத்தியேகத்தன்மை போன்றன சேர்க்கப்படுகின்றன. கிழக்கு பகுதியின் சிறந்த விருந்தோம்பல் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. infinity pool அனுபவம் அல்லது karaoke இல் மனம் விரும்பியதைப் போல பாடல் பாடுவது. ஸ்பா சிகிச்சைகளுடன் ஓய்வு பெறுவது அல்லது டெனிஸ் அல்லது பூப்பந்தாட்டத்துடன் உடல்நிலையை திடமாக வைத்திருப்பது போன்ற அனுபவங்களைப் பெறலாம். உள்நாட்டு கலாசாரத்துடன் இணைவது அல்லது பாசிக்குடாவின் கரையோரத்தில் படகுகளில் சவாரி செய்வது, நட்சத்திரங்களின் கீழ் பிரத்தியேகமான இராப்போசணத்தை அருந்தி மகிழ்வது போன்ற பல சிறந்த அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
விருந்தினர்களுக்கு Slice & Grill ஊடாக, விசேடமான poolside உணவருந்தும் அனுபவத்தை அல்லது Beach Shack இல் கரீபியன் பாணியில், வெப்பவலயத்துக்குரிய பானங்களை அருந்தும் அனுபவத்தை பெற்றுக் கொள்ளவும் முடியும்.
Sun Siyam பாசிக்குடாவில் விருந்தினர்களுக்கு ஒப்பற்ற அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். மே மாதம் 17 – 18 திகதிகளில் Hall B இலுள்ள C169 மற்றும் C176 காட்சிகூடங்களுக்கு விஜயம் செய்து எமது பிரதிநிதிகளுடன் உரையாடுங்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
6 hours ago
9 hours ago