2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

Sun Siyam பாசிகுடாவின் சுதந்திர தினக் கொண்டாட்டம்

Freelancer   / 2024 பெப்ரவரி 12 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்குடன், மறுசீரமைக்கப்பட்டு அண்மையில் மீண்டும் திறந்து வைக்கப்பட்ட Sun Siyam பாசிகுடா, 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியது. கிழக்கு பிராந்தியத்தில் புதிய யுகத்தை ஆரம்பித்து, விருந்தினர்களுக்கு ஒப்பற்ற விருந்தோம்பல் அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றலுக்கும், ஹோட்டலின் கொடி ஏற்றலுக்கும் ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர்களை அழைத்து பங்கேற்கச் செய்திருந்தது. அவ்வேளையில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டிருந்தது. விருந்தினர்கள் மற்றும் அணியினர் தேநீர் விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்ததுடன், இதர விருந்தினர்களுடன் உள்ளக உணவு வகைகளை அருந்தி மகிழ்ந்திருந்தது.

Studio Sixty7 உடன் கைகோர்த்து Sun Siyam பாசிகுடா மறுசீரமைப்பு செயற்பாடுகளைத் தொடர்ந்து, 2023 நவம்பர் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் கலாசார செழுமையை மேம்படுத்தி ஒப்பற்ற சொகுசை வழங்கும் வகையில் இது அமைந்துள்ளது.

 

2023 ஆம் ஆண்டில் 1.48 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்ததுடன், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 200,000 சுற்றுலாப் பயணிகள் சமூகமளித்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) அறிவித்துள்ளது. கிழக்கு பிராந்தியம் இதில் முக்கிய பங்காற்றியிருந்ததுடன், விருந்தினர்களுக்கு இலங்கையின் இரம்மியமான பகுதிகளையும், ஒப்பற்ற கரைகள், பரந்தளவு உணவு, ஆலயங்கள், வனஜீவராசிகள் மற்றும் கலாசார அம்சங்களை காணக்கூடியதாக இருந்தது.

Sun Siyam பாசிகுடா பொது முகாமையாளர் அர்ஷெத் ரெஃபாய் கருத்துத் தெரிவிக்கையில், “நாம் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், Sun Siyam பாசிகுடா பிராந்தியத்தின் மீட்சிக்கும், விருந்தினர்கள் மற்றும் சமூகத்தாரின் நலனிலும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் அடையாளமாக அமைந்துள்ளோம். எமது விருந்தினர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவது மாத்திரமன்றி, இப்பிரதேசங்களைச் சேர்ந்த வசிப்போருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குகின்றோம். இலங்கையின் சுற்றுலா மீட்சியில் அங்கம் பெறுவதற்கு சிறந்த தருணமாக அமைந்திருப்பதுடன், தேசத்தின் சமூக மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்குவதையிட்டும் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

Sun Siyam பாசிகுடாவில் 34 இடவசதிகள் நிறைந்த நவீன ஒன்று – இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட பெவிலியன்கள் ஜோடிகள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் குழுவுக்கு சிறந்த கரையோர அனுபவத்தை வழங்குகின்றது. ரிசோர்ட்டின் மாற்றியமைப்பில் செழுமையான உள்ளக பகுதிகள் அடங்கியிருப்பதுடன், பிரத்தியேகமான உள்ளம்சம், ஒப்பற்ற மற்றும் சிறந்த சூழலை வழங்குவதாக அமைந்துள்ளது.

ரிசோர்ட்டினால் விருந்தினர்களுக்கு ஒப்பற்ற உணவுசார் சிறப்பம்சங்கள் வழங்கப்படுவதுடன், இலங்கையின் ஒப்பற்ற தெரிவுகள் மற்றும் பாரம்பரிய அம்சங்களையும் வழங்கப்படுகின்றது. குறிப்பிடத்தக்க தெரிவுகளில், இலங்கையின் கிழக்கு கரையோர பகுதியில் காணப்படும் மாபெரும் வைன் விற்பனையகமான The Cellar அடங்கியிருப்பதுடன், சுவை நிறைந்த தேநீர் அனுபவத்தை வழங்குவதற்கு Tea House அமைந்துள்ளது. Slice & Grill கரையோர கொள்கைசார் அலங்கார வடிவமைப்பினைக் கொண்டுள்ளதுடன், Beach Shack இனால் கரீபியன் அனுபவம் சேர்க்கப்படுகின்றது.

இலங்கையின் அதிசயங்களை கண்டு களிப்பதற்கு Sun Siyam பாசிகுடா வாய்ப்பளிப்பதுடன், குடாப் பகுதியில் snorkeling, scuba diving, jet-skiing, kayaking மற்றும் tube rides ஆகிய அனுபவங்களைப் பெற வாய்ப்பளிக்கின்றது. மேலும், ஒப்பற்ற சந்திப்பு மற்றும் நிகழ்வுக்கான வசதிகளை ரிசோர்ட் வழங்குவதுடன், பிரத்தியேகமான கரையோர திருமணங்கள், பாரம்பரிய வைபவங்கள் மற்றும் சொகுசான திருமண அழைப்புகள் ஆகியவற்றை மேற்கொள்ள வாய்ப்பளிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .