Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Freelancer / 2024 ஏப்ரல் 08 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
விருந்தினர்களுக்கு தமிழ், சிங்கள புத்தாண்டை மனம் மறவாத அனுபவத்துடன் வரவேற்கும் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்காக விசேட சலுகைகளை வழங்குவதாக Sun Siyam பாசிகுடா அறிவித்துள்ளது.
கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல், இந்தப் பண்டிகைக் காலத்தை கொண்டாடுவதற்கு சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. இருவருக்கு half-board அடிப்படையில் விசேட கட்டணமான ரூ. 36,900 க்கு வழங்க முன்வந்துள்ளது. இதர விசேட சலுகைகளில், இலவச அறை மேம்படுத்தல் மற்றும் நெகிழ்ச்சியான முன்கூட்டிய வருகைகள் மற்றும் பிந்திய வெளியேறல்கள் போன்றன அறைகளின் கிடைப்பனவுகளின் அடிப்படையில் அடங்கியுள்ளன. ஏப்ரல் மாதம் முழுவதிலும் இந்தச் சலுகை வழங்கப்படுவதுடன், விருந்தினர்களுக்கு ஒப்பற்ற வசதிகளை வழங்கி, பாசிகுடாவின் சொகுசு மற்றும் இரம்மியமான சூழலை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் மனம்மறவாத அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்காக பண்டிகைக் காலத்துக்குரிய விநோதமான பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் செயற்பாடுகள் போன்றனவும் அடங்கியிருக்கும்.
மாசற்ற கரையோரப்பகுதிகள் மற்றும் கலாசாரப் பெறுமதிகள் போன்றவற்றுக்கு புகழ்பெற்ற பாசிகுடா, இயற்கை அழகுடன், பிரத்தியேகமான அனுபவங்களையும் வழங்குவதற்கு புகழ்பெற்றுள்ளது. சொகுசு தங்குமிடம், சிறந்த உணவு, புத்துணர்வூட்டும் ஸ்பா சிகிச்சைகள் மற்றும் பெருமளவு சாகச அனுபவங்கள் போன்ற விருந்தினர்களுக்கு வாழ்நாள் நினைவுகளை ஏற்படுத்தும் வசதிகளை வழங்குகின்றது. Sun Siyam பாசிகுடாவினால், இலங்கையின் விருந்தோம்பல் துறையின் ஒப்பற்ற அனுபவம் வழங்கப்படுகின்றது.
கவர்ச்சிகரமான உள்ளக தோற்றங்களுடன், 34 இடவசதிகள் நிறைந்த ஒன்று முதல் இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட கார்டின் மற்றும் பீச் பெவிலியன்களைக் கொண்டுள்ளது.
Infinity pool இல் நீச்சல் அனுபவம், நலன் பேணல் சிகிச்சை அல்லது கலாசார செயற்பாடுகளில் பங்கேற்பது என எதுவாக இருந்தாலும், Sun Siyam பாசிகுடாவினால் ஒவ்வொரு அனுபவமும் ஒப்பற்றதாக அமைந்திருப்பது உறுதி செய்யப்படுகின்றது. உள்நாட்டு கலை மற்றும் கைவினை அம்சங்களுடன் பாசிகுடாவின் காட்சியம்சங்கள் நிறைந்த கரையோர அனுபவம் மேம்படுத்தி வழங்கப்படுவதோடு, ஜொலித்திடும் நட்சத்திரங்களின் கீழே பிரத்தியேகமான இராப் போசண அனுபவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கையின் பிரத்தியேகமான சுவைகளுடன் தயாரிக்கப்படும் உணவுகளை உண்டு மகிழக்கூடியதாக இருக்கும். கிழக்கு கரையோரப் பகுதியில் காணப்படும் சிறந்த வைன் தெரிவுகளுடன், சிறந்த தேநீர் சுவைக்கும் அனுபவத்தை Tea House வழங்குகின்றது. இவற்றினூடாக விருந்தினர்களுக்கு மனம் மறவாத உணவருந்தும் அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்துடன், விருந்தினர்களுக்கு Slice & Grill ஊடாக, விசேடமான poolside உணவருந்தும் அனுபவத்தை அல்லது Beach Shack இல் கரீபியன் பாணியில், வெப்பவலயத்துக்குரிய பானங்களை அருந்தும் அனுபவத்தை பெற்றுக் கொள்ளவும் முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
58 minute ago
1 hours ago