2025 ஜனவரி 09, வியாழக்கிழமை

Sun Siyam பாசிகுடா ஹோட்டலுக்கு Travelife Gold சான்றிதழ்

Freelancer   / 2025 ஜனவரி 03 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

Sun Siyam பாசிகுடா விருந்தினர்களுக்கு பிரத்தியேகமான சொகுசு மற்றும் நிலைபேறாண்மையை வழங்குகின்றமைக்காக பெருமைக்குரிய Travelife Gold சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சூழலுக்கு நட்பான சுற்றுலா மற்றும் சமூக வலுவூட்டல் போன்றவற்றுக்கான அர்ப்பணிப்புக்காக இந்த உயர் கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான நிலைபேறான சுற்றுலா விருத்திக்காக சுற்றுலா பகுதிகள், வியாபாரங்கள் மற்றும் பிரயாணிகளுக்கு புத்தாக்கமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காக ஆதரவளிக்கும் இலாப நோக்கற்ற நிகழ்ச்சித்திட்டமாக Travelife அமைந்துள்ளது. Travelife Gold சான்றிதழை எய்துவதற்கு ஒரு ரிசோர்ட் 163 நிலைபேறாண்மை விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அவற்றில் கழிவு மற்றும் வலுப்பாவனையை குறைத்தல், சமூக பிரச்சனைகளை தீர்த்தல், ஊழியர் நலன்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு சமூகங்கள் மற்றும் வியாபாரங்களுக்கு ஆதரவளித்தல் போன்றன அடங்கியுள்ளன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லுடன், Sun Siyam பாசிகுடா, “தங்குவதற்கு சிறந்த பகுதிகள்” வழங்குவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், சூழல் மற்றும் சமூகத்தில் நேர்த்தியான தாக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

Sun Siyam பாசிகுடாவின் பொது முகாமையாளர் அர்ஷத் ரிஃபாய் குறிப்பிடுகையில், “சூழலுக்கு நட்பான செயற்பாடுகள், சமூக ஈடுபாடு மற்றும் கலாசார பிரத்தியேகத்தன்மை ஆகியவற்றை ஒன்றிணைத்து, இன்றைய ஆர்வமுள்ள பிரயாணிகளுக்கு ஒப்பற்ற பெறுமதிகளுடனான அனுபவத்தை வழங்குகின்றது. Travelife தங்க சான்றிதழை எய்தியுள்ளமையானது, எமது மிகவும் பெருமைக்குரிய மைல்கல்லாக அமைந்துள்ளது.” என்றார்.

Sun Siyam ரிசோர்ட்ஸ் நிலைபேறாண்மை செயற்திட்ட முகாமையாளர் சமிந்த உபுல் குமார கருத்துத் தெரிவிக்கையில், “நிலைபேறான பிரயாணம், உள்நாட்டு சமூகங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் சூழலை பாதுகாத்தல் போன்றவற்றுக்கான எமது அர்ப்பணிப்பை இது மீள உறுதி செய்துள்ளது. பிந்திய சான்றளிப்புடன், இலங்கை மற்றும் மாலைதீவுகளிலுள்ள எமது சகல சொத்துகளும் தற்போது 100 சதவீதம் Travelife சான்றளிப்பை பெற்றதாக அமைந்துள்ளன. எமது குழுமத்துக்கு இது மாபெரும் சாதனையாக அமைந்துள்ளது.” என்றார்.

Sun Siyam பாசிகுடாவில் காணப்படும் சில கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முயற்சிகளில், மீள்சுழற்சிக்கு முக்கியத்துவமளித்தல், கொம்போஸ்ட் ஆக்கல் மற்றும் சூழலுக்கு நட்பான தூய்மைப்படுத்தல் தயாரிப்புகளை பயன்படுத்தல் போன்றன அடங்கியுள்ளன. சூரிய வலுவில் ஒளியூட்டல், LED தொழினுட்பம் மற்றும் நீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றன அடங்கியுள்ளன. விருந்தினர்களும், தாம் தங்கியிருக்கும் காலப்பகுதியில், தமது அறைகளில் காணப்படும் மீள்சுழற்சி தெரிவுகள் மற்றும் தகவல் வழிகாட்டல்களினூடாக இந்தத் திட்டங்களில் பங்கேற்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ரிசோர்ட்டின் நிலைபேறாண்மை நிகழ்ச்சிநிரலில் பிரதான அரணாக உயிரியல்பரம்பல் பாதுகாப்பு அமைந்துள்ளது. CarePhant செயற்திட்டம், உடவளவை பகுதியில், யானைகள் சரணாலயத்தில் இளம் யானைக் குட்டிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டமாக அமைந்துள்ளதுடன், வனஜீவராசிகள் பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பாக அமைந்துள்ளது. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் போன்ற அமைப்புகளுடனான பங்காண்மையுடன், இலங்கையின் செழுமையான உயிரியல் பரம்பலுக்கு ரிசோர்ட் பங்களிப்பு வழங்குகின்றது. ரிசோர்ட்டின் அண்மையில் மறுசீரமைப்பு பணிகளில், பிரதேசத்திலிருந்து பெறப்பட்ட மூங்கில் மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதனூடாக, இலங்கையின் கலைஞர்களின் கலையம்சங்களை கொண்டாடும் வகையில் செயலாற்றியிருந்ததுடன், காபன் பிரசன்னத்தை குறைத்திருந்தது. செழுமையான பசுமை வெளிகள் சூழ்ந்த பகுதியில் அமைந்திருப்பதுடன், 34 அறைகளும் சூழலுடன் ஒன்றித்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர்களுக்கு சூழலுக்கு நட்பான வாழிட அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

சுமார் 90 சதவீதமான Sun Siyam பாசிகுடாவின் ஊழியர்கள் அண்மித்த ஊர்களை சேர்ந்தவர்கள். உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், பயிற்சிகள் மற்றும் விருத்தி நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் மற்றும் சமூக ஈடுபாடு திட்டங்களான கரையோர சுத்திகரிப்பு, மர நடுகை திட்டங்கள் மற்றும் சூழல் பாதுகாப்பு மற்றும் வழிநடத்தல் தொடர்பில் கல்விசார் பயிற்சிப்பட்டறைகள் போன்றன முன்னெடுக்கப்படுகின்றன.

ரிசோர்ட்டின் தோட்டத்தில் பசுமையான, சேதன பழங்கள், மரக்கறிகள் மற்றும் மூலிகைகள் தயாரிக்கப்படுவதுடன், விருந்தினர்களுக்கு பண்ணையிலிருந்து உணவு மேசைக்கான உணவருந்தும் அனுபவம் வழங்கப்படுகின்றது. சேதன முறையி்ல் தயாரிக்கப்பட்ட அம்பரெல்லா மரங்களிலிருந்து பெறப்பட்ட அம்பரெல்லா வரவேற்பு பானம் போன்றவற்றுடன் உள்நாட்டு, நிலைபேறான பெற்றுக் கொள்ளலில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

விருந்தினர்கள் பிரத்தியேகமான கலாசார செயற்பாடுகளிலும் பங்கேற்க முடியும். அதில் சமையல் வகுப்புகள், பாரம்பரிய நடன செயற்பாடுகள் மற்றும் அருகாமையில் காணப்படும் வரலாற்று தலங்களுக்கு விஜயம் செய்தல் போன்றன இதில் அடங்கியுள்ளன. இவற்றினூடாக, நாட்டின் பாரம்பரியத்துடன் ஆழமான பிணைப்பு ஏற்படுத்தப்படுகின்றது.

Sun Siyam Cares நிகழ்ச்சித்திட்டத்தினூடாக, சகல Sun Siyam சொத்துகளிலும் நிலைபேறாண்மை ஊக்குவிக்கப்படுகின்றது. சூழல் தாக்கங்களை குறைத்தல், உள்நாட்டு சமூகங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் கலாசார பாரம்பரியத்தை பேணல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகின்றன. ஒற்றை பாவனை பிளாஸ்ரிக்களை குறைத்தல், புதுப்பிக்கத்தக்க வலுவில் முதலீடு மற்றும் உள்நாட்டிலிருந்து மூலப்பொருட்களை பெறல் போன்றன நிலைபேறான சுற்றுலாவில் ஹோட்டல் குழுமத்தின் அர்ப்பணி்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X