Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 02, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 28 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
Sun Siyam பாசிகுடா சர்வதேச சமையல் நிபுணர் தினக் கொண்டாட்டத்தை அண்மையில் முன்னெடுத்திருந்தது. இந்த விசேட தினத்தில், ஹோட்டலின் பொது முகாமையாளர் அர்ஷெத் ரிபாய் கொண்டாட்டங்களை வழிநடத்தியிருந்ததுடன், Sun Siyam பாசிகுடாவின் புகழ்பெற்ற பரந்த சமையல் தெரிவுகளை தயாரித்து வழங்கும் சமையல் நிபுணர்களின் சிறந்த பங்களிப்பை கௌரவித்திருந்தார்.
இந்த ஆண்டின் தொனிப்பொருளாக “எதிர்காலத்துக்கு ஆரோக்கியமான உணவு” (“Healthy Food for the Future”) என்பதாக அமைந்திருந்தது. நல்வாழ்வை ஊக்குவிப்பதில், பசுமையான, பரிபூரண சேர்மானங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டிருந்தது. Sun Siyam பாசிகுடா தனது ஒவ்வொரு உணவு வகையிலும் இந்தக் கொள்கையை பின்பற்றி ஊக்குவிக்கின்றது. இந்த தொனிப்பொருளின் நோக்குக்கமைய, இலங்கையின் பரந்தளவு சுவைகளை பிரதிபலிக்கும் உணவு வகைகளை வடிவமைத்திருந்ததுடன், அதில் உள்நாட்டிலிருந்து பெறப்பட்ட சேர்மானங்கள், நிலைபேறாண்மை மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றுக்கு முக்கியத்துவமளித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பான கேக் கலவை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது, இதில் ஹோட்டலின் விருந்தினர்களும் இணைந்து கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். உலர் பழங்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் ஸ்பிரிட் வகைகள் அடங்கலாக பெருமளவு பசுமையான சேர்மானங்களை கொண்டு இந்த கலவை தயாரிப்பு முன்னெடுக்கப்பட்டது. பங்குபற்றுநர்கள் இந்த விறுவிறுப்பான தொடர்பாடல் அனுபவத்தில் பங்கேற்று, பாரம்பரியத்துடன் களிப்பையும் அனுபவித்திருந்தனர். நினைவில் நிலைத்திருக்கும் உள்ளடக்கமான அனுபவங்களை உருவாக்குவதில் ரிசோர்ட்டின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
தமது அணியினரின் மீது தாம் கொண்டுள்ள பெருமை தொடர்பில் பொது முகாமையாளர் அர்ஷெத் ரிபாய் தெரிவிக்கையில், “இலங்கையின் விருந்தோம்பலின் கருவை எமது சமையல் நிபுணர்கள் வெளிப்படுத்துகின்றனர். பாரம்பரியத்தையும் புத்தாக்கத்தையும் ஒன்றிணைக்கும் கலையை அவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் திறன்களை மாத்திரம் நாம் கொண்டாடாமல், எமது நாட்டின் செழுமையான உணவு பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் கொண்டாடுகின்றோம்.” என்றார்.
இலங்கை தனது பரந்தளவு உணவு தோற்றப்பாட்டுக்காக நன்கு அறியப்படுகின்றது. பல நூற்றாண்டு கால பல்கலாசார பாரம்பரியத்தின் செல்வாக்குடன் அமைந்த இந்த உணவு வகைகள் மிகவும் பிரபல்யம் பெற்றன. கரையோர கறிகளின் நறுமணத்துடனான வாசனைத் திரவியங்கள் முதல் தேங்காய் கலந்த உணவு வகைகளின் செழுமை போன்றவற்றினூடாக இலங்கையின் உணவு நாட்டின் பிரத்தியேகமான கலாசார அம்சங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. Sun Siyam பாசிகுடாவின் உணவு அணியினர், இந்த பன்முகத்தன்மையின் அம்சங்களை கையகப்படுத்தி, இலங்கையின் செழுமையான வரலாற்றை வெளிப்படுத்தும் கதையை கூறும் உணவு வகைகளை தயாரித்து வழங்குகின்றனர்.
Sun Siyam பாசிகுடாவின் புகழ்பெற்ற உணவக பகுதிகளில் பரிமாறப்படும் பரந்த உணவுத் தெரிவுகளை அனுபவித்து மகிழுமாறு விருந்தினர்கள் வரவேற்கப்படுகின்றனர். ரிசோர்ட்டில் காணப்படும் ஒவ்வொரு உணவகமும் நாட்டின் சுவைகளை வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளன. குறிப்பாக, Beach Shack இல் பசுமையான கடலுணவாக அமையட்டும், The Cellar இல் பிரத்தியேகமான உணவருந்தும் அனுபவமாக அமையட்டும், அல்லது Tea House இல் இலங்கையின் பாரம்பரிய உணவுகளாக அமையட்டும், அனைத்தும் இதனை நிறைவேற்றுகின்றன.
Sun Siyam பாசிகுடா சர்வதேச சமையல் நிபுணர் தினத்தை கொண்டாடும் நிலையில், இலங்கையின் உணவு மற்றும் விருந்தோம்பலை சர்வதேச மட்டத்தில் ஊக்குவிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளது. நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியிலும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. உள்நாட்டில் பெறப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்துவது, நிலைபேறான செயன்முறைகள் மற்றும் பாரம்பரிய உணவு செய்முறைகள் போன்றவற்றுக்கான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ள இந்த ரிசோர்ட், ஒவ்வொரு உணவு வகையிலும் இலங்கையின் அடையாளத்தை வெளிப்படுத்துவதை உறுதி செய்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago