2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

Slingshot Accelerator இரண்டாம் திட்டத்தை ஹேமாஸ் மற்றும் Hatch முன்னெடுக்கவுள்ளன

Freelancer   / 2024 ஜூலை 01 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹேமாஸ், Hatch உடன் இணைந்து Hemas x Hatch Slingshot திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. 2023 ஆம் ஆண்டில் முன்னெடுத்திருந்த Accelerator திட்டத்தின் வெற்றிகரமான பூர்த்தியைத் தொடர்ந்து, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், சுகாதாரப் பராமரிப்பு போன்ற துறைகளைச் சேர்ந்த 25 ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு Slingshot 2.0 ஊடாக ஆதரவளிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. முதற் கட்டத்தின் போது கல்வி மற்றும் கல்வித் தொழில்நுட்பம், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் சரக்குக் கையாளல் போன்ற துறைகளைச் சேர்ந்த 25 ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கும், 8 ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு accelerated ஆதரவையும் வழங்கியிருந்தது. இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு புத்தாக்கம் மற்றும் பங்களிப்பை ஊக்குவித்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது.

நீண்ட வரலாற்றைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஹேமாஸ் குழுமம், வியாபார சூழலில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு புத்தாக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. இந்த அர்ப்பணிப்பின் பிரகாரம், 2023 ஆம் ஆண்டில் தனது 75 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் 75 ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கான இலக்கையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருந்தது.  இந்த ஆரம்பநிலை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இந்தத் திட்டங்கள் உதவியாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களாகவும் திகழ்கின்றன.

Hemas x Hatch Slingshot நிகழ்ச்சித் திட்டமானது, சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் பரஸ்பர அனுகூலங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக ஆரம்பநிலை நிறுவனங்கள் பெருமளவு பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், ஆலோசனைகளைப் பெறல், பெறுமதியான வளங்களை அணுகல் மற்றும் ஹேமாஸின் பரந்த வலையமைப்பை அணுகல் போன்ற வசதிகளைப் பெற்று தமது வெற்றிப் பயணத்தை துரிதப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். மாறாக, புத்தாக்கமான சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் போன்றவற்றுக்கு வெளிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பை ஹேமாஸ் பெற்று, அதன் வளர்ச்சி உறுதி செய்யப்படும். இந்த கைகோர்த்த செயற்பாடுகளினூடாக, இலங்கையினூள் மிகவும் விறுவிறுப்பான ஆரம்பநிலை கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவதுடன், அதனூடாக தொழில்நிலைகள் உருவாக்கப்பட்டு, தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கப்படும்.

இந்த அறிமுகம் தொடர்பில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பிரதம மூலோபாய மற்றும் வளர்ச்சி அதிகாரி ரிஸ்னி பைசல் கருத்துத் தெரிவிக்கையில், “முதலாவது Hemas x Hatch Slingshot நிகழ்ச்சிக்கு கிடைத்திருந்த பெருமளவு வரவேற்பைத் தொடர்ந்து, இலங்கையின் ஆரம்ப நிலை நிறுவன கட்டமைப்புக்கு பெருமளவு ஆதரவளிக்கப்பட்டிருந்தது. Slingshot 2.0 என்பது இந்தத் திட்டத்தின் மூலோபாய தொடர்ச்சியாகும். கல்வி, கல்வித் தொழில்நுட்பம், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் சரக்குக் கையாளல் போன்ற பிரதான துறைகளில் இலக்கு வைக்கப்பட்ட ஆதரவை வழங்குவதனூடாக, சவால்களுக்கு தீர்வை வழங்கக்கூடிய மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய புத்தாக்கங்களை ஊக்குவிக்க நாம் எதிர்பார்க்கின்றோம். உறுதியான மற்றும் மீட்சியுடனான இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஹேமாஸின் நீண்ட கால நோக்கத்துடன் மிகவும் பொருத்தமானதாக இது அமைந்துள்ளது. ஆதரவளிக்கப்படும் ஆரம்பநிலை நிறுவனங்கள் வெற்றிகரமாக வியாபாரங்களாக மாறுவது மாத்திரமன்றி, முன்னேற்றத்தை வழிநடத்திச் செல்வோர், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல், நிதிசார் உள்ளடக்கத்தை தோற்றுவித்தல் மற்றும் சகல இலங்கையர்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X