Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 09 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
Sun Siyam ரிசோர்ட்ஸ், தனது Sun Siyam Pasikudah மற்றும் Sun Siyam Iru Fushi ஆகியவற்றின் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளராக பசன் விஜேவர்தனவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. 2024 ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
விருந்தோம்பல் துறையில் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலான அனுபவத்தை பசன் கொண்டுள்ளதுடன், இலங்கை, மாலைதீவுகள் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் சொகுசு, வாழ்க்கைமுறை மற்றும் முழு சேவை ஹோட்டல்களில் தலைமைத்துவ நிலைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். அண்மையில் இவர் Shangri-La Muscat இல் விற்பனைகள் மற்றும் வணிக அபிவிருத்திக்கான பணிப்பாளராக செயலாற்றியிருந்தார். அதன் போது, வியாபார வளர்ச்சி மற்றும் மூலோபாய விருத்தி ஆகியவற்றில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார். இந்த நிலையை வகிக்கும் முன், Shangri-La, Sri Lanka இல் விற்பனை பிரிவின் பணிப்பாளராக செயலாற்றியிருந்தார். இவர் தமது தொழில் வாழ்க்கையை இலங்கை Cinnamon Hotels & Resorts இல் ஆரம்பித்ததுடன், Cinnamon city hotels ஐ போட்டிகரமான சந்தை நிலைக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.
Sun Siyam ரிசோர்ட்ஸில் பசன் வகிக்கும் முதல் நிலையாக இது அமைந்திராமல், முன்னர் மாலைதீவுகள் Sun Siyam Iru Veli இல் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளராக செயலாற்றியிருந்தார். ரிசோர்ட்டின் வளர்ச்சி மற்றும் சந்தை பிரசன்னம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார். Sun Siyam ரிசோர்ட்ஸுக்கு இவரின் மீள்வருகை என்பது, வர்த்தக நாமத்துடனான அவரின் நிபுணத்துவம் மற்றும் உறுதியான உறவுகள் போன்றவற்றுக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இவரின் புதிய நிலையில், Sun Siyam Iru Fushi மற்றும் Sun Siyam பாசிக்குடா ஆகியவற்றின் வருமான வளர்ச்சியை கட்டியெழுப்புவது, வர்த்தக நாம தோற்றப்பாட்டை மேம்படுத்துவது மற்றும் சந்தை பிரசன்னத்தை சீராக்குவது போன்றவற்றில் அதிகளவு கவனம் செலுத்துவார். விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் அணிக்கு இவர் தலைமை வகிப்பதுடன், பிரதான பங்காளர்களுடன் உறுதியான பங்காண்மைகளை கட்டியெழுப்புவது மற்றும் தொடர்ந்தும் சிறந்த விருந்தினர் அனுபவங்களை ஏற்படுத்துவது போன்றவற்றை உறுதி செய்வார்.
குழுமத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகள் பணிப்பாளர் அஹமட் நவுபல் கருத்துத் தெரிவிக்கையில், “Sun Siyam குடும்பத்துக்கு பசனை மீண்டும் வரவேற்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். விருந்தோம்பல் துறையில் இவரின் பரந்த அனுபவம் மற்றும் தலைமைத்துவம் ஆகியன எமது அணியினருக்கு சிறந்த சொத்தாக அமைந்திருக்கும். இவரின் வழிகாட்டலில், Sun Siyam Iru Fushi மற்றும் Sun Siyam பாசிக்குடா ஆகியன தொடர்ந்தும் சிறந்த அனுபவங்களை எமது விருந்தினர்களுக்கு வழங்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
58 minute ago
6 hours ago