2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

Samsung சிறப்பு இலவசத்திரை மாற்று சலுகை

Janu   / 2024 மே 06 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தினசரி நாம் முகம் கொடுக்கும் சவால்களினை எதிர்கொள்ளும் வகையினில் வடிவமைக்கப்பட்ட புதிய Galaxy A05 மற்றும்Galaxy A05s ஆகியவற்றை Samsung நிறுவனம் ஆனது வெளியிட்டுள்ளது. மேலும் அதன் பாவனையாளர்களினைத் திருப்திப்படுத்தும் வகையினில், Samsung Sri Lanka 'Break-Free Offer 'இனை அறிமுகப்படுத்துவதனையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றது. Galaxy A05மற்றும் Galaxy A05sகளுக்கான முதல் 12 மாதங்களுக்குள்ளாக ஒரு முறை மாத்திரம் சிறப்பு இலவசத்திரை மாற்று சலுகை அளிப்பினை அறிமுகப்படுத்துகின்றது.  இச்சலுகையானது  டிசம்பர் 31, 2023 அன்று அல்லது அதற்கு முன்னர் activation செய்யப்பட்ட தொலைபேசிகளுக்கு மட்டுமே பொருந்தும், குறிப்பாக இது முதல் முறையாக activation செய்யப்பட்ட தொலைபேசிகளுக்கு மட்டுமே பொருந்தும்,  மற்றும் இச்சலுகையானது கைமாற்றத் தகாததாகும். 

இவ் விசேட சலுகையினை அனுபவிப்பதற்கு, வாடிக்கையாளர்கள் மாற்றீடுச்  செயல்பாட்டின் போது கையாளுகைக்  கட்டணமாக ரூ.3,000ஐ  மட்டுமே செலுத்த வேண்டும். இச்சலுகையானது  ஓர் உரிமை கோரலுக்கு மட்டுமே செல்லுபடியாகும், மற்றய  சலுகைகளுடன் இதனை இணைக்கவோ, கைமாற்றம் செய்யவோ, பணமாக இதனை  மாற்றவோ முடியாது. Samsung இன்சேவை நிலையமானது தகமையினை உறுதி செய்ய IMEI ஆனது Activation செய்யப்பட்ட திகதியின் அடிப்படையில் உரிமை கோரல்களினைக் கவனமாகச் சரிபார்க்கும்.

Galaxy A05 மற்றும் Galaxy A05s என்பனவற்றினைக் கொள்வனவு செய்ய  ஆர்வமுள்ள அதன் பாவனையாளர்களுக்கு சுமூகமான கொள்வனவு  அனுபவத்தினை உறுதி செய்வதனை நோக்கமாகக்கொண்டு Samsung SriLanka ஆனது அர்ப்பணிப்புடன் செயல்ப்படுகின்றது.  Smartphone களினை Online  மற்றும் Offline முறைகளின்  ஊடாகவும் கொள்வனவு செய்ய முடியும். Online கொள்வனவுகளினை  JKOA, Singer, Softlogic, Dialog மற்றும் SLT-Mobitel என்பனவற்றிலும்,  Offline மூலமாக விரும்பினால், அவற்றினைத் தேர்ந்தெடுக்கப்பட்ட Samsung இன் பிரத்யேக விற்பனவு நிலையங்களான, JKOA, Singer, Softlogic, Damro, Dialog  மற்றும்  SLT-Mobitelஎன்பனவற்றில் நாடு பூராவும் தற்போது கொள்வனவு செய்யமுடியும்.

இலங்கையில், No.1 Smartphone Brand ஆக   Samsung ஆனது தொடர்ந்து  நான்கு வருடங்களாக ‘மிகவும் விரும்பப்படும் பெறுமதி வாய்ந்த இலத்திரனியல் வர்த்தக நாமமாக’ எமது  இளைஞர் சமுதாயத்தின் மத்தியில்  கெளரவப்படுத்தப்  பட்டுள்ளது  என Slim Sri Lanka வின்  மதிப்பாய்வு மூலம் தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து வயதினை உடையோரையும்  உள்ளடக்கும் வகையில்  பரந்த வாடிக்கையாளர் தளத்துடன், GenZ மற்றும் மில்லினியல் பிரிவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அசைக்க முடியாத Samsung  இன்  அர்ப்பணிப்பானது  இடையறாததாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .