Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
Saegis கம்பஸ், தனது பட்டமளிப்பு வைபவத்தை அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) முன்னெடுத்திருந்தது. கம்பஸின் உபவேந்தர் பேராசிரியர் நாலக ஜயகொடியின் மேற்பார்வையின் கீழ், கடுமையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி இந்த வைபவம் இடம்பெற்றது. இந்த வைபவத்தின் போது தமது பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளோமா கற்கைகளை பூர்த்தி செய்த சுமார் 976 மாணவர்கள் தமது பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த வைபவத்தின் பிரதம அதிதியாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு கல்வியகத்தின் முகாமைத்துவ பேராசிரியரான பேராசிரியர் அஜந்த எஸ். தர்மசிறி மற்றும் துறையின் அனுபவசாலியும், டயலொக் அக்சியாடா பிஎல்சியின் பணிப்பாளரும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுபுன் வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வைபவத்தில் Saegis கம்பஸ் தவிசாளர் பண்டார திசாநாயக்க, கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் டபிள்யு ஜி டி தர்மரட்ன, ஆளுகை சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவின் Canterbury Christ Church University இலிருந்து Master of Business Administration (MBA) பட்டத்தை மொத்தமாக 125 பட்டதாரிகள் பெற்றுக் கொண்டதுடன், MSc International Business programme கற்கையை பூர்த்தி செய்த 21 பட்டதாரிகளும் தமக்கான பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். Saegis கம்பஸ் மற்றும் பல்கலைக்கழகத்துக்கிடையிலான நீண்ட கால பங்காண்மை என்பது உறுதியாக வளர்ச்சியடைந்துள்ளதுடன், உலகத் தரம் வாய்ந்த பட்டப்பின்படிப்பு கற்கைகளை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளது. இதனூடாக புத்தாக்கமான சிந்தனை மற்றும் அறிவுப் பகிர்வுக்கு வழிகோலப்பட்டுள்ளது.
இலங்கையின் புகழ்பெற்ற கல்விமான்கள் மற்றும் நிபுணர்களால் இந்த கற்கைகள் கற்பிக்கப்படுவதுடன், அதனூடாக இன்றைய தலைவர்கள் கொண்டுள்ள அறிவு மற்றும் திறன்களின் பிந்திய விடயங்களை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களை கூட்டாண்மைத் துறையில் பிரவேசிக்க அல்லது தமது நிலைகளில் முன்னேறுவதற்கு அல்லது தொழில் முயற்சியாளர்களுக்கு சிறப்பாக செயலாற்றுவதற்கு உதவியாக அமைந்துள்ளது.
மேலும் 201 பட்டதாரிகள் பிரித்தானியாவின் Canterbury Christ Church University இலிருந்து BSc (Hons) in Business Management programme பட்டத்தைப் பெற்றுக் கொண்டனர். மேலும் சிலர் BSc (Hons) in Computing பட்டத்தைப் பெற்றுக் கொண்டதுடன், இதில் பிரித்தானியாவின் Heriot Watt University இன் Business Management உச்ச பட்டமும் அடங்கியிருந்தது.
இந்த வைபவத்தின் போது ஐக்கிய இராஜ்ஜியத்தின் பெருமைக்குரிய Scottish Qualification Authority இடமிருந்து சுமார் 560 மாணவர்களுக்கு Higher National Diploma (HND) in Business Management பட்டமளிக்கப்பட்டிருந்ததுடன், 64 மாணவர்களுக்கு Higher National Diploma (HND) in Computer Science பட்டமும் வழங்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago