Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
Saegis கம்பஸ் தனது பட்டமளிப்பு விழாவை அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுத்திருந்தது. இந்நிகழ்வில் 513 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டிருந்தது. Saegis Convocation எனும் தலைப்பில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் களனி பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வா விசேட அதிதியாகவும், ஐக்கிய இராஜ்ஜியத்தின் Canterbury Christ Church பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியான பேராசிரியர் மொஹமட் அப்தெல்-மக்குயிட் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர். இதர விசேட விருந்தினர்களில், இலங்கை கல்வி அமைச்சின் அரச சாரா உயர் கல்வி பிரிவின் மேலதிக செயலாளர் திருமதி. எச்.டி.சி. ஜானகி மற்றும் Pearson UK இன் பிரதி பொது முகாமையாளர் சூரிய பிபிலே ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் வரவேற்புரையை, Saegis கம்பஸ் தவிசாளரும், சக்யா குரூப் ஒஃவ் ஹயர் எடியுகேஷன் தவிசாளர் பண்டார திசாநாயக்க ஆற்றியிருந்தார். அவரைத் தொடர்ந்து Saegis கம்பஸ் உப வேந்தர் பேராசிரியர் நாலக ஜயகொடி, பட்டங்களை வழங்கியிருந்தார்.
வழங்கப்பட்ட கற்கைகளில் Canterbury Christ Church பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட Master of Business Administration, BSc (Hons) Business Management and BSc (Hons) Accounting and Finance போன்றன அடங்கியிருந்ததுடன், Saegis கம்பஸினால் வழங்கப்பட்ட Bachelor of Information Technology மற்றும் Bachelor of Business Administration பட்டங்கள் அடங்கியிருந்தன. இவற்றுக்கு கல்வி அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன், பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கிகாரமும் வழங்கப்பட்டிருந்தன.
மேலும், வழங்கப்படும் ஏனைய தகைமைகளில் வியாபார முகாமைத்துவம் மற்றும் மென்பொருள் பொறியியல் ஆகியவற்றில் Pearson BTEC HND, மற்றும் Scottish Qualifications Authority (SQA) இடமிருந்து வணிகம் மற்றும் கணனி விஞ்ஞானம் ஆகியவற்றில் உயர் டிப்ளோமா ஆகியன அடங்கியுள்ளன.
உயர் செயற்திறன் வாய்ந்த மற்றும் திறமையான மாணவ பட்டதாரிகளை உருவாக்கும் தனது இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிப்பதுடன், தமது அறிவையும் திறன்களையும் மேம்படுத்திக் கொள்ளும் கல்விப் பயணத்தில் பொருளாதாரத்துக்கும், சமூகத்துக்கும் பல்வேறு வழிகளில் பங்களிப்பு வழங்குவார்கள். நுகேகொட பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள Saegis கம்பஸ், நவீன கல்வி வசதிகளுடன் பயிலும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதுடன், மாணவர்களின் நலன் கருதி பல்வேறு சேவைகளையும் வழங்குகின்றது.
Saegis கம்பஸினால் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு அனுமதியளிக்கப்பட்ட பட்டப்படிப்பு, அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட மாணவர்களுக்கான வட்டியில்லாத கடன் வசதிகள் போன்றன அடங்கலாக உத்தரவாதத்துடனான தொழிற்துறை நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago