2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

SUN SIYAM ரிசோர்ட்ஸ் கொழும்பில் விசேட நிகழ்வு

Freelancer   / 2023 டிசெம்பர் 08 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு கரையோரத்தில் தனது மேம்படுத்தப்பட்ட ஐந்து நட்சத்திர சொகுசு புட்டிக் ஹோட்டலான Sun Siyam பாசிக்குடாவை மீள ஆரம்பித்ததை குறிக்கும் விசேட நிகழ்வை அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது.

Sun Siyam ரிசோர்ட்ஸ் புட்டிக் ஹோட்டல் தொடரின் அங்கத்தவராக அமைந்துள்ள இந்த ரிசோர்ட் இந்த நிகழ்வுக்கு பிரயாண முகவர் பங்காளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட பிரமுகர்களை வரவேற்றிருந்தது. இதில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் அடங்கியிருந்தனர். மேம்படுத்தப்பட்டு மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஹோட்டலின் பிரத்தியேகமான அனுபவங்கள் மறறும் நாட்டுக்கு வழங்கப்படும் பங்களிப்பு ஆகியவற்றை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியிருந்தது.

Sun Siyam ரிசோர்ட்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி தீபக் பூநெடி வரவேற்புரை ஆற்றியிருந்தார். அதனைத்தொடர்ந்து பொது முகாமையாளர் அர்ஷத் ரிஃபாய் வரவேற்று உரையாற்றியதுடன், ரிசோர்ட் தொடர்பான விளக்கமளிப்பை Sun Siyam பாசிக்குடா விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் துலங்க டி மெல் ஆற்றியிருந்தார்.

சுற்றுலாப் பயணிகள் அதிகளவு நாடும் பகுதியாக இலங்கை மீண்டு வரும் சூழலில், இந்த அழகிய தீவிற்கான தனது ஒப்பற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கான சிறந்த காலப்பகுதியாக Sun Siyam ரிசோர்ட்சுக்கு இது அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் Sun Aqua பாசிக்குடா எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹோட்டல், 2020 ஆம் ஆண்டில் மீளவர்த்தக நாம பெயரிடலுக்குட்படுத்தப்பட்டு Sun Siyam ரிசோர்ட்ஸ் ஹோட்டல் தொடரின் அங்கமாக, Sun Siyam பாசிக்குடா எனப் பெயர் மாற்றப்பட்டது.

Sun Siyam பாசிக்குடாவின் இலங்கையின் மனம்மறவாத அனுபவங்களை வழங்கும் அர்ப்பணிப்பில் புதிய அத்தியாயமாக இந்த மீளத்திறப்பு அமைந்துள்ளது. ஐந்து நட்சத்திர புட்டிக் ஹோட்டல், இலங்கையின் மாசற்ற கிழக்கு கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் ஆறு மணி நேரத்தில் பயணிக்கக்கூடியதாக இருக்கும். 34 இடவசதிகளைக் கொண்ட ஒன்று முதல் இரண்டு படுக்கையறைகள், பூந்தோட்டப் பகுதி அல்லது கடற்கரை பெவிலியன்கள், நீச்சல் தடாகத்துடன் அல்லது நீச்சல் தடாகமின்றி பெற்றுக் கொள்ள முடிவதுடன், ஜோடியாக, குடும்பமாக அல்லது நண்பர்கள் குழுவாக பயணிப்போருக்கு பிரத்தியேகமான கரையோர அனுபவத்தை உறுதி செய்வதாக Sun Siyam பாசிக்குடா அமைந்துள்ளது.

உள்ளக வடிவமைப்பு மறுசீரமைப்பில் முக்கிய பங்காற்றியிருந்த Studio Sixty7இன் ஸ்தாபகர்களும் புத்தாக்க பணிப்பாளர்களுமான லீ மெக்நிகோல் மற்றும் ஜோஸ் ரிவேரோ ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஹோட்டல் திட்டத்துக்கான எமது வடிவமைப்பு கொள்கையானது, 5 நட்சத்திர புட்டிக் உள்ளக அலங்காரத்துடன், மொனோகுரோமெட்டிக் உள்ளக வடிவமைப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த திட்டத்தை வடிவமைக்கும் போது, பாசிக்குடா கரையோரப் பகுதியில் பிரத்தியேகமான, மதிநுட்பமான மற்றும் கண்கவர் உள்ளக அலங்காரத்தை ஏற்படுத்த தீர்மானித்திருந்தோம்.” என்றனர்.

இந்த ரீசோர்ட்டினூடாக சிறந்த உணவருந்தும் அனுபவம், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் சுவைகளுடன் வழங்கப்படுகின்றன. இலங்கையின் கிழக்கு கரையோரப் பகுதியில் காணப்படும் மாபெரும் wine cellar ஆன The Cellar, பெருமளவு தேநீர் தெரிவுகளை, தேயிலை முன்னோடிகளை ஒருங்கிணைத்து வழங்கும் Tea House, நீச்சல் தடாகத்தை அண்மித்த உணவருந்தும் அனுபவத்தை வழங்கும் the Slice & Grill இல் pizza and grill உணவுகள் வழங்கப்படுவதுடன், Beach Shack இல் பான வகைகள் போன்றன அடங்கியுள்ளன.

Sun Siyam பாசிக்குடாவில், விருந்தினர்களுக்கு இலங்கையின் பிரத்தியேகமான அதிசங்களை கண்டுகளிப்பதற்கான வாய்ப்புகள் பெற்றுக் கொள்ளலாம். பாசிக்குடா கரையோரத்தின் அழகிய கடல் நீரினுள் காணப்படும் உலகை அனுபவிக்க முடியும். snorkel அல்லது scuba diving சாகச அனுபவத்தை பெற்று பவளப் பாறைகளை பார்வையிடலாம். குடா பகுதியில் jet-skiing, kayaking மற்றும் tube rides ஆகிய அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .