Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 06 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலைபேறான வளர்ச்சிக்கான திறன்கள் (SSG) செயற்திட்டம், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆறு புதிய பயிலல் நிலையங்களை ஆரம்பித்து மற்றுமொரு முக்கியமான மைல்கல்லை எய்தியுள்ளது. இந்த நிலையங்கள், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, கம்பஹா மாவட்டத்தின் கட்டுநாயக்க, கொழும்பு மாவட்டத்தின் ராஜகிரிய, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச் சேனை, திருகோணமலை மாவட்டத்தின் குச்சாவெளி மற்றும் அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. ஏற்கனவே நான்கு நிலையங்கள், கண்டி மாவட்டத்தின் செங்கடகல, மாத்தளை மாவட்டத்தின் நாவுல, நுவரெலியா மாவட்டத்தின் மீபிலிமான மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரவில பகுதிகளில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விரிவாக்கத்துடன், இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு SSG தனது இளைஞர் விருத்தி செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளது. அதனூடாக, நாட்டில் காணப்படும் மாபெரும் விருந்தோம்பல் கற்கைகள் நிலையங்களில் ஒன்றாக திகழ்கின்றது. குறைந்த வசதிகள் படைத்த இளைஞர்களுக்கு இன, மத, பாலின பாகுபாடின்றி சமமான வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கின்றது. அண்மைய புள்ளிவிவரங்களின் பிரகாரம், 600 க்கும் அதிகமான மாணவர்கள் தம்மை பதிவு செய்து கொண்டுள்ளதுடன், தற்போது பயிற்சிகளைப் பெறுகின்றனர். 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மேலும் 970 மாணவர்களை உள்வாங்கி பயிற்சியளிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில், புதிய நிலையங்களை ஆரம்பிப்பதற்கான திட்டங்களும் அடங்கியுள்ளன. 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கானது, சகல 10 நிலையங்களிலும் 1830 மாணவர்களை பதிவு செய்வதாகும்.
நிலையங்களின் பிந்திய தரவுகளின் பிரகாரம், நுவரெலியா SSG ஐச் சேர்ந்த முதல் தொகுதி மாணவர்கள், செப்டெம்பர் மாதத்தில் தமது ஐந்து மாத தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்யவுள்ளனர். இந்த மாணவர்கள், புகழ்பெற்ற ஹோட்டல்களான Grand Hotel, Hill Club, Seven Heaven, Landale, மற்றும் Oliphant Bungalow by Amaya போன்றவற்றில் தமக்கான நிலைகளை பெற்றுள்ளனர். அதேவேளை, கண்டி நிலையத்தின் இரண்டாம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் தமது நான்கு மாத கோட்பாட்டு கற்கையை ஜுலை மாதத்தில் பூர்த்தி செய்திருந்ததுடன், Grand Kandyan, Mahaweli Reach, Cinnamon Citadel, Casamara Hotel, மற்றும் Heritance Tea Factory போன்றவற்றுக்கு கொடுப்பனவுகளுடனான தொழிற்பயிற்சிக்கு தெரிவாகியுள்ளனர்.
அதுபோன்று, நாவுல நிலையத்தின் இரண்டாம் தொகுதியினர், Hunas Falls, Cinnamon Citadel, Sigiri Village, Jetwing Lake, Occidental Paradise, Hikka Tranz, Devon Rest, மற்றும் Mahaweli Reach போன்ற ஹோட்டல்களில் கொடுப்பனவுகளுடனான தொழிற்பயிற்சியில் இணைந்துள்ளனர். வீரவில நிலையத்தின் முதல் தொகுதி மாணவர்கள் தமது நான்கு மாத கால வகுப்பறை கோட்பாட்டு கற்கையை பூர்த்தி செய்து, Shangri-La Hambantota, Laya Safari, Thaulle Ayurvedic Resort, Rice of Life by Tissa Inn, Tamarind Tree Tissamaharama, மற்றும் Cinnamon Wild Yala ஆகிய ஹோட்டல்களில் தொழிற்பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.
SSG செயற்திட்டம், விருந்தோம்பல் துறையில் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுப்பது மாத்திரமன்றி, பிரயோக திறன்களை மேம்படுத்துவது, நிஜ உலக அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பது மற்றும் மென் திறன் விருத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் அமைந்துள்ளது. விருந்தோம்பல் தொழிற்துறையில் மாணவர்களுக்கு சிறப்பாக செயலாற்றுவதற்கு இவை முக்கியமானவை என்பதில் SSG நம்பிக்கை கொண்டுள்ளது. ஒவ்வொரு நிலையமும் நியமமான கல்விசார் நாட்காட்டியை பின்தொடர்வதுடன், மாணவர்களுக்கு தொழிற்துறை நிபுணர்கள் மற்றும் மென் திறன் பயிற்றுவிப்பாளர்களின் கீழ் பயிற்சிகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதாக அமைந்திருக்கும். பாடவிதானத்தில் தலைமைத்துவம், தொடர்பாடல், பேச்சுவார்த்தைகள், குழுநிலை செயற்பாடுகள், புகழ்பெற்ற ஹோட்டல்களுக்கான கள விஜயங்கள், பொது முகாமையாளர்களால் விருந்தினர்களுக்கான உரைகள், நேர்காணல் தயார்ப்படுத்தல் அமர்வுகள், விருந்தோம்பல் மாதிரி செயற்பாடுகள், பொதுப் பேச்சு மற்றும் சுயவிவரக்கோவை கட்டியெழுப்பல் அமர்வுகள் போன்றன அடங்கியிருக்கும்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான பங்காளர்களான தேசிய இளைஞர் சேவைகள் நிலையங்கள் மற்றும் ஹோட்டல் சம்மேளனங்களுடன் SSG இணைந்து, மேலும் பல கல்விசார் செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதனூடாக, மாணவர்களுக்கு சுயநம்பிக்கையுடன் அவசியமான அறிவு மற்றும் திறன்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். இறுதியாக, உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் உலகத் தரம் வாய்ந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதிலும் உதவியாக இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
44 minute ago
54 minute ago
1 hours ago