2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

SLT டிஜிட்டல் சேர்விசஸ் உடன் ஏசியன் ஹார்ட்வெயார் (Pte) Ltd கைகோர்ப்பு

Freelancer   / 2023 நவம்பர் 10 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏசியன் ஹார்ட்வெயார் (Pte) Ltd, SLT டிஜிட்டல் சேர்விசஸ் (பிரைவட்) லிமிடெட் உடன் கைகோர்த்துள்ளது. இந்த பங்காண்மையினூடாக, ஹார்ட்வெயார் விற்பனைத்துறையில் ஏசியன் ஹார்ட்வெயார் (Pte) Ltd கொண்டுள்ள நிபுணத்துவமும், புத்தாக்கமான டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதற்கான SLT டிஜிட்டல் சேர்விசஸ் கொண்டுள்ள தொழில்நுட்ப நிபுணத்துவமும் இணைக்கப்பட்டுள்ளது.

தமது இலத்திரனியல் வணிக தீர்வை SLT டிஜிட்டல் சேர்விசஸ் நிறுவனத்துக்கு வழங்கும் தீர்மானத்தினூடாக, ஏசியன் ஹார்ட்வெயார் (Pte) Ltd இன் தூரநோக்கான வழிமுறை பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இன்றைய வியாபார சூழலில் ஒன்லைன் வணிகத்தின் முக்கியத்துவம் அதிகரித்துச் செல்வதை கவனத்தில் கொண்டு, நிறுவனத்தினால் தனது டிஜிட்டல் பிரசன்னத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற ஒன்லைன் சொப்பிங் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏசியன் ஹார்ட்வெயார் (Pte) Ltd இன் தவிசாளர் கலாநிதி. எம்.எச்.ஏ. ரசாக் கருத்துத் தெரிவிக்கையில், “எமது இலத்திரனியல் வணிக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக SLT டிஜிட்டல் சேர்விசஸ் உடன் கைகோர்த்துள்ளமை தொடர்பில் அறிவிப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

ஏசியன் ஹார்ட்வெயார் (Pte) Ltd இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.எம். யஷீர் கருத்துத் தெரிவிக்கையில், “வியாபாரங்கள் இயங்கும் முறையில் தொழில்நுட்பம் செல்வாக்கு செலுத்தும் காலகட்டத்தில், இந்த கைகோர்ப்பினூடாக, எமது வாடிக்கையாளர்களுக்கு முன்னரை விட மேலும் சிறந்த மற்றும் சௌகரியமான சேவைகளை பெற்றுக் கொடுக்க வலுவூட்டுவதாக இருக்கும் என நம்புகின்றோம்.” என்றார்.

வியாபார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான டிஜிட்டல் தீர்வுகளை தயாரித்து நடைமுறைப்படுத்துவதில் SLT டிஜிட்டல் சேர்விசஸ் பெருமளவு அனுபவத்தைக் கொண்டுள்ளது. புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் வெற்றிகரமான செயற்பாடுகள் போன்றவற்றுக்கான அவர்களின் அர்ப்பணிப்புகள், ஏசியன் ஹார்ட்வெயார் (Pte) Ltd இன் இலக்குகளுடன் மிகவும் பொருந்துவதாக அமைந்துள்ளதுடன், ஒப்பற்ற மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய இலத்திரனியல் வணிக கட்டமைப்பை உருவாக்க ஏதுவாக அமையும்.

SLT டிஜிட்டல் சேர்விசஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி உபுல் மஞ்சநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “ஏசியன் ஹார்ட்வெயார் (Pte) Ltd இன் இலத்திரனியல் வணிக ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக இணைந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். வியாபாரங்களை மேம்படுத்தி மாற்றியமைப்பதற்கான நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு எமது அணியினர் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். எமது பங்காண்மையினூடாக ஏசியன் ஹார்ட்வெயார் (Pte) Ltd வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஒன்லைன் சொப்பிங் அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .