Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 மார்ச் 19 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - படகு மற்றும் கடற்றொழில் சாதனங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவில் இயங்கும் Cey-Nor Foundation லிமிடெட், தனது மெருகேற்றம் செய்யப்பட்ட இணையத்தளத்தை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச சென்றடைவு மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஈடுபாடு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான மூலோபாய நகர்வை இதனூடாக வெளிப்படுத்தியுள்ளது. SLT டிஜிட்டல் சேவைகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ள Cey-Nor இன் நோக்கம், இன்றைய டிஜிட்டல் காலகட்டத்துக்கு பொருத்தமான வகையில் இயங்குவதாக அமைந்துள்ளது.
Cey-Nor Foundation லிமிடெட் தவிசாளர் கலாநிதி. துலான் ஹெட்டியாரச்சி குறிப்பிடுகையில், சர்வதேச சந்தைகளில் நிலவும் மீன் பொருட்களுக்கான கேள்வியை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை நிலவுகின்றது. குறிப்பாக, ஐரோப்பா மற்றும் ஜப்பானிய சந்தைகளில் இந்த வாய்ப்புகள் காணப்படுகின்றன. “இரு நூற்றாண்டு காலமாக, நாம் தேயிலை மற்றும் இறப்பர் போன்ற பாரம்பரிய பொருட்களை ஏற்றுமதி செய்கின்றோம். அதுபோன்று, இந்த சந்தைகளுக்கு மீன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. Cey-Nor அதன் படகு கட்டும் ஆற்றலுடன், ஃபைபர் படகு தயாரிப்பை மேம்படுத்தி, நிலைபேறாண்மைக்காக சூரிய வலுவை பயன்படுத்தல் போன்றவற்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது.” என்றார்.
மீன்பிடித்துறையின் முக்கியத்துவத்தைப் பற்றி ஹெட்டியாரச்சி குறிப்பிடுகையில், 2009 ஆம் ஆண்டில் வடக்கு மற்றும் காரைநகரில் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு பணிகளில், Cey-Nor இன் ஈடுபாட்டினூடாக, கடற்றொழில் துறைக்கு மாத்திரம் உதவிகள் வழங்கப்படாமல், சுற்றுலாத் துறைக்கும் பங்களிப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக திமிங்கிலங்கள் பார்வையிடலுக்கு பங்களிப்பு வழங்கப்பட்டது என்றார்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Cey-Nor இணையத்தளம் வெளிப்படைத்தன்மை, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்திய தன்மை போன்றவற்றுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டாகும். பிரதான உள்ளம்சங்களில், தொழிற்துறை போக்குகள், தயாரிப்பு அறிமுகம் மற்றும் நிறுவன செய்திகள் பற்றிய உடனுக்குடனான பதிவேற்றங்களினூடாக, பங்காளர்களுக்கு ஈடுபாட்டை பேணவும், தகவல்களை அறிந்திருக்கவும் முடியும். விருந்தினர்களுக்கு Cey-Nor இன் பரந்தளவு சேவை வழங்கல்கள் மற்றும் வினைத்திறனான தொடர்பாடல் நாளிகைகள் பற்றிய தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
SLT டிஜிட்டல் சேர்விசஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி உபுல் மஞ்சநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “Cey-Nor Foundation லிமிடெட்டுடன் இணைந்து, அவர்களின் டிஜிட்டல் பிரசன்னத்தை மேம்படுத்த வாய்ப்புக் கிடைத்தமை உண்மையில் எமக்கு பெருமையாக உள்ளது. வியாபார செயற்பாடுகளில் புரட்சியை ஏற்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். புதிய சர்வதேச சந்தைகளில் இந்த பங்காண்மையினூடாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago