Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 நவம்பர் 22 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, 2021 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வரிக்கு பிந்திய இலாபத்தில் 49.2 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. இந்தப் பெறுமதி ரூ. 3.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தினுள் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் விரயத்தை குறைத்து, கழிவுகளை பணமாக மாற்றிய நடவடிக்கைகளுடன், செயற்பாட்டு செலவுகளை நிர்வகித்திருந்ததனூடாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சேமிப்புகளை பதிவு செய்ய முடிந்திருந்தது.
SLT குழுமத்தின் 2021 மூன்றாம் காலாண்டுக்கான வருமானம் 15.6 சதவீதத்தால் அதிகரித்து, ரூ. 26.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தின் EBITDA (Earnings Before Interest, Tax, Depreciation and Amortisation) பெறுமதி ரூ. 10.8 பில்லியனாக பதிவாகியிருந்தது. அது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் 2020 மூன்றாம் காலாண்டில் 37.1 சதவீதமாக தென்பட்ட EBITDA வரம்பு(EBITDA Margin) இவ்வருட மூன்றாம் காலாண்டில் 40.4 சதவீதமாக பதிவாகியிருந்தது.
2020 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2021 இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வருமானம் 14 சதவீதத்தால் அதிகரித்து ரூ. 76.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய சந்தைப்படுத்தல் உத்தியின் காரணமாக இந்த சாதனை சாத்தியமானது. வீடுகள் மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கான அதிகரித்த ஃபைபர் இணைப்புகள் , PEO TV மற்றும் மொபைல் சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு போன்றவற்றின் பங்களிப்புடன், வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 9.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது 36.1 அதிகரிப்பாகும்.
2021 இன் முதல் 9 மாத காலப்பகுதியில், குழுமத்தின் மூலதன செலவீனம் ரூ. 18.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேசிய ஃபைபர் மயமாக்கல் திட்டத்தின் கீழ், துரிதப்படுத்தப்பட்ட ஃபைபர் விரிவாக்கம் ஊடாகவும், புதிய LTE base stations மற்றும் tower களில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தமை போன்றவற்றினூடாகவும் இலங்கையில் தரமான டிஜிட்டல் இணைப்புத்திறனை மேம்படுத்தும் குழுமத்தின் அர்ப்பணிப்பு முன்னேற்றத்தை பதிவு செய்திருந்தது. மேலும், புதிய 5G தொழில்நுட்பத்தினூடாக, இலங்கையர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவம் வழங்கப்படும். கடலுக்கடியிலான கேபிள் வலையமைப்பு மற்றும் உள்ளக போக்குவரத்து வலையமைப்பு போன்றவற்றில் குழுமத்தின் முதலீடுகள் உறுதியாக அமைந்திருப்பதுடன், தரத்தை மேம்படுத்தி, சேவை மட்டங்களை உயர்ந்த நிலையில் பேணுவதற்கு பங்களிப்பு வழங்குகின்றன.
முதல் 9 மாத காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கான SLT குழுமத்தின் பங்களிப்பு மொத்தமாக ரூ. 15.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் நேரடி, மறைமுக வரிகள் மற்றும் கட்டணங்கள் மற்றும் பங்கிலாபங்களும் அடங்கியிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
5 hours ago