Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL புத்தாக்க தினம் 2024 அண்மையில், மருதானை, ட்ரேஸ் சிட்டி, Embryo Innovation Center இல் அண்மையில் நடைபெற்றது. இதில், நிறுவனத்தின் ஊழியர்களினால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு தீர்வுகள் மற்றும் புத்தாக்கமான சிந்தனைகள் போன்றன வெளிப்படுத்தப்பட்டிருந்தன. டிஜிட்டல் யுகத்தில் உள்ளக புத்தாக்கம் மற்றும் தொழினுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் SLT-MOBITEL சிரேஷ்ட முகாமைத்துவ குழுவினர், நிறுவனத்தின் இதர பிரதிநிதிகள் மற்றும் மதிப்பாய்வு குழு அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு எட்டு மாத கால Intrapreneurship Studio நிகழ்ச்சியின் வெளிப்பாடாக அமைந்திருந்ததுடன், SLT R&D இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்று பிரிவுகளில் சிறந்த புத்தாக்கங்களை கௌரவிப்பதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. அவற்றில் சிந்தனை புத்தாக்கம், புதிய தயாரிப்பு மற்றும் தீர்வுகள் புத்தாக்கம் மற்றும் செயன்முறை மற்றும் செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு (O&M) புத்தாக்கம் போன்றன அடங்கியிருந்தன. சிறந்த intrapreneurs களுக்கு நிறுவனசார் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாடு மற்றும் நலனை முன்னெடுத்திருந்த அவர்களின் பங்களிப்புகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. நிகழ்வின் Demo தினம், 2024 டிசம்பர் 8 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டதுடன், இளம் புத்தாக்கவியலாளர்களுக்கு தமது புத்தாக்க ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்பளித்திருந்தது.
Intrapreneurship Studio நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு புத்தாக்கத்துக்கான அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. தெரிவு செய்யப்பட்ட பங்குபற்றுனர்கள் தமது தீர்வுகளை SLT-MOBITEL இன் சிரேஷ்ட முகாமைத்துவத்துக்கும் துறைசார் பங்காளர்களுக்கும் வெளிப்படுத்தி, திறமை மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கான நிறவனத்தை அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தது. SLT-MOBITEL R&D இனால் வடிவமைக்கப்பட்ட நவீன தீர்வுகளை இந்த நிகழ்வு உள்ளடக்கியிருந்தது. அவற்றில், SenseGrid, Environmental Monitoring, OneClick, ParkEase மற்றும் Bank IoT போன்றன அடங்கியிருந்தன. நிஜ உலக சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான பிரயோக ரீதியான தீர்வுகளை கட்டியெழுப்புவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்த புத்தாக்கங்கள் வெளிப்படுத்தியிருந்தன.
MAS Innovation இன் Futureworks பணிப்பாளரும், IQ Global இன் ஸ்தாபருமான அஹமட் இர்பான் இந்நிகழ்வில் விசேட பேச்சாளராக கலந்து கொண்டார். ‘Trends in Innovation in the Service Industry,’ எனும் தலைப்பில் இவர் விசேட உரையை ஆற்றியிருந்தார். அதனூடாக, சேவைத் துறையில் வளர்ந்து வரும் தொழினுட்ப முன்னேற்றங்களின் தாக்கம் மற்றும் எதிர்காலத்தில் அவற்றின் தாக்கம் ஆகியன தொடர்பில் முக்கியமான தரவுகளை பகிர்ந்திருந்தார்.
SLT-MOBITEL இன் மாற்றியமைப்பு பயணத்தில் புத்தாக்கம் ஆழமாக பதிந்துள்ளது. நிகழ்வில் வெளிப்படுத்தப்பட்ட சிறந்த தீர்வுகளினூடாக, இலங்கையின் தொழினுட்ப கட்டமைப்பில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஊழியர்களின் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. பங்குபற்றுனர்கள் மத்தியில் அறிவு பகிர்வு மற்றும் கைகோர்ப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago