2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

SLT-MOBITEL உடன் Hotel Sanira கைகோர்ப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 21 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, பிட்ட கோட்டே பகுதியில் அமைந்துள்ள 3 நட்சத்திர ஹோட்டலான Hotel Sanira உடன் SLT-MOBITEL மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளது. அதனூடாக, SLT-MOBITEL ஃபைபர் இணைப்பினூடாக PeoTV மற்றும் அதிவேக Wi-Fi இணைப்பு வசதிகளை வழங்க முன்வந்துள்ளது. இதனை குறிக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடல் நிகழ்வு கொழும்பு கோட்டே பகுதியில் அமைந்துள்ள பிராந்திய ரெலிகொம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த பங்காண்மை உடன்படிக்கையில் SLT இன் மெட்ரோ – பொது முகாமையாளர் பிராந்திய வியாபாரங்கள், சேதன அத்தநாயக்க மற்றும் Hotel Sanira பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் ரணசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர். Hotel Sanira இன் விருந்தினர்களுக்கான டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த கைகோர்ப்பு அமைந்திருக்கும். அதற்காக, ஒப்பற்ற விநோத மற்றும் அதிவேக இணைய இணைப்புகளை ஹோட்டல் முழுவதிலும் வழங்கும்.

SLT இன் மெட்ரோ – பொது முகாமையாளர் பிராந்திய வியாபாரங்கள், சேதன அத்தநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “SLT-MOBITEL இன் நவீன PeoTV மற்றும் ஃபைபர் தீர்வுகளை வழங்குவதற்காக Hotel Sanira உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். அதனூடாக அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற அனுபவத்தை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். இந்த நடவடிக்கையினூடாக வியாபாரங்களுக்கு புத்தாக்கமான டிஜிட்டல் தீர்வுகளைக் கொண்டு வலுவூட்டும் SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

Hotel Sanira பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்கள் உயர் தரமான சேவைகளை எதிர்பார்ப்பதுடன், SLT-Mobitel உடன் ஏற்படுத்தியுள்ள இந்த பங்காண்மையினூடாக, உயர் தரம் வாய்ந்த களிப்பூட்டும் மற்றும் இணைப்பை எம்மால் வழங்கக்கூடியதாக இருக்கும். இந்த கைகோர்ப்பினூடாக Hotel Sanira இன் சகல விருந்தினர்களின் ஒட்டு மொத்த அனுபவத்தை மேம்படுத்துவதில் நாம் அதிகம் அக்கறை கொண்டுள்ளோம்.” என்றார்.

இலங்கையின் டிஜிட்டல் வாழ்க்கைமுறையை மேம்படுத்தும் வகையில் முன்னணி PeoTV மற்றும் ஃபைபர் சேவைகளை SLT-MOBITEL வழங்குகிறது. PeoTV இனால் சிறந்த களிப்பூட்டும் உள்நாட்டு மற்றும் சர்வதேச தொலைக்காட்சி நாளிகைகள் மற்றும் on-demand அம்சங்கள் வழங்கப்படுவதுடன், SLT-MOBITEL இன் ஃபைபர் தீர்வுகளினால் அதிவேக, தங்கியிருக்கக்கூடிய இணைப்புத்திறன் வழங்கப்படுகிறது. இந்த சேவைகளினூடாக, தொழினுட்ப புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையர்களை உலகத் தரம் வாய்ந்த தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் இணைத்து, கல்வி, பணி, களிப்பூட்டும் அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட் வசிப்பு ஆகியவற்றை பெற்றுக் கொள்ள உதவுகிறது.

Hotel Sanira உடனான உடன்படிக்கையின் மூலம், மேம்படுத்தப்பட்ட தொழினுட்ப தீர்வுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் SLT-MOBITEL இன் நோக்கம் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனூடாக, இலங்கையின் தொழில்முயற்சியாளர்களின் தெரிவுக்குரிய டிஜிட்டல் பங்காளர் எனும் அதன் நிலை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

பிட்ட கோட்டே பகுதியில் முக்கியத்துவமான அமைவிடத்தில் 3 நட்சத்திர ஹோட்டலாக Hotel Sanira அமைந்துள்ளது. இதில் நவீன வசதிகளுடனான ஆறு குளிரூட்டப்பட்ட அறைகள், இலவச Wi-Fi மற்றும் வாகன தரிப்பிட வசதி போன்றன அடங்கியுள்ளன. பெத்தாகன ஈர நில பூங்கா, தியவன்னா ஓயா மற்றும் ரோயல் கொழும்பு கொல்ஃப் கழகம் ஆகியவற்றை அண்மித்து அமைந்துள்ளது. இயற்கையை ரசிப்பவர்கள் மற்றும் ஓய்வுக்காக பிரயாணம் செய்வோரின் சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. 24 மணி நேர முன் அலுவலக சேவை பகுதி மற்றும் கலாசார மற்றும் பொழுது போக்கு பகுதிகளை இலகுவாக அணுகக்கூடிய வசதி போன்றவற்றை கொண்ட Hotel Sanira, தங்கியிருக்கும் சகல விருந்தினர்களின் சௌகரியத்தை பெரிதும் உறுதி செய்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .