2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

SLT-MOBITEL இரத்தினபுரி கிளை புதிய முகவரிக்கு மாற்றம்

Freelancer   / 2024 ஜனவரி 05 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற உயர்தரமான சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான தமது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்து, தேசிய தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குரான SLT-MOBITEL, தனது இரத்தினபுரி கிளையை புதிய முகவரிக்கு இடமாற்றியுள்ளது.

இல. 428, பிரதான வீதி, இரத்தினபுரி எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தப் புதிய கிளை, வாடிக்கையாளர்களுக்கு இணைப்பை நெருக்கமடையச் செய்வதில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது. நவீன வசதிகளைக் கொண்டு, பெருமளவு உள்ளக இடவசதிகளுடனான இந்தக் கிளை, வாடிக்கையாளர்களுக்கு நட்பான வகையில் உள்ளம்சங்களைக் கொண்டுள்ளது.

SLT-MOBITEL flagship stores களில் கிடைக்கும் சகல பிரதான சேவைகளையும் புதிய இரத்தினபுரி கிளை வழங்கும். வாடிக்கையாளர் சேவை, புதிய இணைப்புகளை வழங்கல், கட்டணப் பட்டியல் உதவிகள் மற்றும் கோரிக்கைகள் போன்ற அனைத்தும், வாடிக்கையாளரின் சௌகரியத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பிட்ட வாழ்க்கைமுறைகளுக்கு பொருத்தமான தீர்வுகள், பிரத்தியேகமான கவனிப்புகள் மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகள் போன்றவற்றை அர்ப்பணிப்பான கிளை ஊழியர்கள் வழங்குவார்கள். அதனூடாக சாதாரண கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பாற்பட்ட வாடிக்கையாளர் உறவுகளை கட்டியெழுப்ப SLT-MOBITEL எதிர்பார்த்துள்ளது. மேலும், இலங்கையின் இல்லங்கள் மற்றும் வியாபாரங்களில் அதிகரித்துச் செல்லும் டிஜிட்டல் தேவைகளை நிறைவேற்றக்கூடிய சாதனங்கள், புதிய இணைப்புகள் மற்றும் eSIM சலுகைகள் போன்ற ஊக்குவிப்பு அம்சங்களையும் இந்தக் கிளை கொண்டிருக்கும். 

வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு சாதனங்கள், நிலையான மற்றும் மொபைல் தீர்வுகள், நிறுவனசார் தீர்வுகள் போன்றவற்றுடன், அறிவார்ந்த ஊழியர்களிடமிருந்து டிஜிட்டல் செயற்பாடுகள் பற்றிய நிபுணத்துவ வழிகாட்டல்களையும் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும். புதிய கிளை திறந்துள்ளதனூடாக, தனது பிராந்திய பிரசன்னத்தை மேம்படுத்துவதற்கு SLT-MOBITEL எதிர்பார்ப்பதுடன், பிரதேசத்தின் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான சேவைகளைப் பெற்றுக் கொடுக்கவும் எதிர்பார்த்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .