Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 மே 03 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, “Every Step of the Way... With every Fibre of our Being” எனும் தலைப்பில் வெளியிட்டிருந்த 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதி அறிக்கைக்கு மூன்று பெருமைக்குரிய சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.
24 ஆவது தெற்காசிய கணக்காளர்கள் சம்மேளனத்தின் (SAFA) சிறந்த வருடாந்த நிதி அறிக்கைகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் 'தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்' பிரிவில் இரண்டாமிடத்தையும், 2019 ஆம் ஆண்டுக்கான கூட்டாண்மை ஆளுகை வெளிப்படுத்தல்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வ்ல ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடலுக்கான விருது மற்றும் SAARC வருடபூர்த்தி விருது ஆகியவற்றை வென்றிருந்தது. சர்வதேச ARC விருதுகள் 2020 வைபவத்தின் போது வருடாந்த அறிக்கையின் சிறந்த முகப்புப் படம்/அலங்காரம் என்பதற்கான வெண்கல விருதையும், தொலைத்தொடர்பாடல் பிரிவில் நிதித்தரவுகளுக்கான சிறப்பு விருதையும் வென்றிருந்தது.
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு தெற்காசிய கணக்காளர்கள் சம்மேளனத்தினால் (SAFA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் சிறந்த நிதி அறிக்கையிடலுக்கான பெருமைக்குரிய விருதுகள் வழங்கும் வைபவமாக அமைந்துள்ளது. சுமார் இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக நிதி அறிக்கையிடலில் சிறப்பை ஊக்குவித்துள்ளது. ARC விருதுகள் வழங்கும் நிகழ்வு என்பது உலகின் முன்னணி வருடாந்த நிதி அறிக்கைகளுக்கான போட்டியாக சுமார் 30 வருட காலமாக திகழ்கின்றது. இந்த விருதுகள் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், வருடாந்த அறிக்கைகள் துறையில் உயர்மட்ட நியமங்களை வழங்குவதாக அமைந்துள்ளது.
இந்த பெருமைக்குரிய விருதுகளைப் பெற்றுக் கொண்டமை தொடர்பாக குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “SLT-MOBITEL என்பது நாட்டில் சிறப்பாக இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வதுடன், உறுதியான கூட்டாண்மை ஆளுகை பொறிமுறை மற்றும் சிறந்த நிதி முகாமைத்துவ கட்டமைப்பையும் கொண்டுள்ளது. இலங்கையின் மாபெரும் தகவல் தொடர்பாடல் உட்கட்டமைப்பு சேவை வழங்குநர் எனும் வகையிலும், இலாபமீட்டும் பெருமளவு அரச உரிமையாண்மையின் கீழ் இயங்கும் நிறுவனம் எனும் வகையிலும், தனது நிதி அறிக்கையிடலில் முழுமையான வெளிப்படைத் தன்மையை பேணுகின்றதுடன், இவ்வாறான அர்ப்பணிப்பு, இந்த பெருமைக்குரிய சர்வதேச விருதுகளினூடாக பிரதிபலிக்கப்பட்டு;ள்ளன. SLT-MOBITEL என்பது துறையின் முன்னோடியாக திகழ்வதுடன், நம்பிக்கையுடன் முன்னோக்கிப் பயணிப்பதற்கு இந்த கௌரவிப்பு பெரும் உதவியாக அமைந்துள்ளது.' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சியின் வருடாந்த நிதி அறிக்கை 2019 - “Every Step of the Way... With every Fibre of our Being” என்பதை பாரிய தோற்றப்பாட்டை குறிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago