Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூன் 21 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL மற்றும் eChanneling ஆகியன வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு, நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் குழுமத்துடன் இணைந்து, “சம்பந்தியாவே தஹமி சத்காரய சுவ சஹன சுகாதார முகாம்” எனும் தலைப்பில் சமூக சுகாதார முகாமை ஏற்பாடு செய்திருந்தன. இரத்மலானை மற்றும் மொரட்டுவ பகுதிகளைச் சேர்ந்த சமூகத்தாரின் நலனை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த முகாமினூடாக, இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த வசிப்போருக்கு இலவச குருதி மற்றும் நீரிழிவு பரிசோதனை, இலவச electrocardiogram (ECGs) பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்கல் போன்றன வழங்கப்பட்டிருந்தன. தகைமை வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்ததுடன், போஷாக்கு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அமர்வுகளை முன்னெடுத்திருந்தனர்.
SLT சந்தைப்படுத்தல் சேவைகள் – பொது முகாமையாளர் அனுருத்த சூரியாரச்சி, மொபிடெல் பிரதம வணிக அதிகாரி – இசுரு திசாநாயக்க, eChanneling வணிக அபிவிருத்தி தலைமை அதிகாரி மோஹன் அஜித்குமார், SLT – மெட்ரோ 02 மாகாண செயற்பாடுகள் பிரதி பொது முகாமையாளர் லிதிர குருகே, நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி ரசிக திலகரட்ன மற்றும் SLT-MOBITEL இன் இதர சில அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
சமூகத்திடமிருந்து இந்த சுகாதார முகாமுக்கு பெருமளவு ஈடுபாடும் வரவேற்பும் காணப்பட்டதுடன், இந்த இலவச மருத்துவ சேவைகளிலிருந்து ஆயிரக் கணக்கானவர்கள் பயன்பெற்றனர். வசிப்போருக்கு வழங்கப்பட்ட இனங்காணல் பரிசோதனைகளின் மூலமாக நிபுணத்துவ வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ள முடிந்தது. சமூகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை SLT-MOBITEL ஊக்குவித்திருந்தது. மலிபன் பிஸ்கட்ஸ் மற்றும் “பரம்பரா” பாரம்பரிய ஊதுவத்திகளும் இந்தத் திட்டத்தில் SLT-MOBITEL உடன் கைகோர்த்திருந்தன.
சுகாதார முகாமில் பங்கேற்க முடியாமல் போனவர்களுக்காக SLT-MOBITEL இனால் டிஜிட்டல் அணுகலுக்கான வசதி eChanneling ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. eChanneling கட்டமைப்பினூடாக இலவச ஒன்லைன் மருத்துவ ஆலோசனைகளைப் பெறக்கூடிய வசதியும் வழங்கப்பட்டது. சௌகரியமான மெய்நிகர் சேவையினூடாக, தமது வசிப்பிடங்களில் இருந்தவாறே நிபுணத்துவ மருத்துவ ஆலோசனையை நாடிய நபர்களுக்கு ஆதரவளிக்கப்பட்டது.
சமூக பொறுப்புக்கூரல் மற்றும் சமூகத்துக்கு மீள வழங்கல் என்பதில் கவனம் செலுத்தும் நிறுவனம் எனும் வகையில் SLT-MOBITEL இனால், முன்னெடுக்கப்பட்ட சுகாதார முகாமினூடாக, சமூகத்தாருக்கு சுகாதாரப் பராமரிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தமது சுகாதார நலனுக்கு முன்னுரிமையளிக்க தனிநபர்களை தூண்டுவதாக அமைந்திருந்தது. வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு SLT-MOBITEL இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வினூடாக, சிறந்த சுகாதாரத்தை வழங்கி, சமூகத்துக்கு பங்களிப்பு வழங்க முடிந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago