Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 08 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மென்பொருள் வடிவமைப்பாளர் சமூகத்தில் புத்தாக்கத்தை மேம்படுத்தல் மற்றும் தொழில்முயற்சியாண்மை திறனை தூண்டும் வகையில், SLT-MOBITEL, hSenid மொபைல் சொலூஷன்ஸ் உடன் இணைந்து, 'Code Blast' தேசிய Hackathon 2023 ஐ முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பங்குபற்றுநர்களுக்கு mSpace – bespoke app வடிவமைப்பு கட்டமைப்பில் பங்கேற்று, தமது ஆக்கத்திறனை வெளிப்படுத்தவும், நிஜ உலக பிரச்சனைகளை தீர்ப்பதற்கான புத்தாக்கமான தீர்வுகளை அறிமுகம் செய்வதற்கும் உதவும் வகையில் அமைந்திருக்கும்.
mSpace 'Code Blast' தேசிய Hackathon நிகழ்வு, இலங்கையின் மென்பொருள் வடிவமைப்பாளர் கட்டமைப்பில் நிலைத்திருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 செப்டெம்பர் 30ஆம் திகதி, கொழும்பு 10, ட்ரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டியில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில், முன்னணி நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் நடுவர்களாக பங்கேற்பர்.
mSpace Code Blast Hackathon இனூடாக பட்டதாரிகள், பட்டம் பயிலும் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை, புத்தாகக்த்தினூடாக ஒன்றிணைக்க எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரே எண்ணங்களைக் கொண்டவர்களுடன் இணைந்து அணியாக இந்த போட்டியில் தமது ஆக்கங்களை நடுவர்களின் முன்பு சமர்ப்பிக்குமாறு mSpace அழைப்பு விடுத்துள்ளது. வெற்றியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகள் வழங்கப்படும்.
பங்குபற்றுநர்களுக்கு தமது பிரச்சனை தீர்க்கும் திறன்களை வெளிப்படுத்தி, SLT-MOBITEL இன் app வடிவமைப்பு கட்டமைப்பான mSpace இனூடாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. தொழில்முயற்சியாண்மை தொடர்பான பண்புகளை இந்த நிகழ்வு ஊக்குவிப்பதுடன், பங்குபற்றுநர்களுக்கு தமது சிந்தனைகளை வியாபாரத் தீர்வுகளாக மாற்றியமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றது. ஆக்கபூர்வமான சிந்தனையினூடாக, பங்குபற்றுநர்களுக்கு தொழில்நுட்பத்தின் வலிமையை பயன்படுத்தி, நிஜ உலக சவால்களுக்கு தீர்வு காண்பதற்கும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
SLT-MOBITEL mSpace 'Code Blast' தேசிய Hackathon என்பது உறுதியான மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட வடிவமைப்பாளர் சமூகத்தின் திறவுகோலாக அமைந்திருக்கும். பங்குபற்றுநர்களுக்கு தமது தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி, தொழில்முயற்சியாண்மை மனநிலையை கட்டியெழுப்பிக் கொள்ளவும் முடியும்.
SLT-MOBITEL’s mSpace என்பது, வடிவமைப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பில் ஈடுபடாதவர்களுக்கும் தமது சொந்த telco-based அப்ளிகேஷன்களினூடாக வருமானமீட்டிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. mSpace இனால் வழங்கப்படும் பெருவாரியான APIs இனூடாக தமது programming நிபுணத்துவத்தை ஒன்றிணைத்து, புத்தாக்கமான தீர்வுகளை உருவாக்க முடியும். அது போன்று, coding பின்புலமற்ற நபர்களுக்கு, mSpace’இன் பாவனையாளர்களுக்கு நட்பான கட்டமைப்பை பயன்படுத்தி, சில clicks களில் அப்ளிகேஷன்களை வடிவமைத்துக் கொள்ள முடியும்.
SLT-MOBITEL mSpace 'Code Blast' தேசிய Hackathon இல் பங்கேற்பதற்கு, 19 வயதுக்கு மேற்பட்ட ஐந்து (5) அங்கத்தவர்களைக் கொண்ட அணியாக காணப்பட வேண்டும். மேலும், mSpace APIs ஐ பயன்படுத்திய தீர்வு கண்டிப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். தீர்வில் generative AI பயன்படுத்தப்படுவது தெரிவுக்குரியது. அணிக்கு மேலதிக புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இறுதியான தீர்வு, முழுமையாக அல்லது பகுதியளவில் செயலாற்றும் தீர்வாக அமைந்திருக்க வேண்டும்.
hackathon நிறைவில் விண்ணப்பதாரிகளுக்கு தமது அப்ளிகேஷன்களை பணமாக்கிக் கொள்வதற்கு ஆதரவளித்து, வழிகாட்டும் பணிகளை SLT-MOBITEL முன்னெடுக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago