Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூழல் பாதுகாப்பில் தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்யும் வகையில், SLT-MOBITEL, 2024 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை, “இலங்கையின் கண்டல்தாவர சூழல்கட்டமைப்பு” எனும் தொனிப்பொருளில் அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த கண்டல்தாவர கட்டமைப்பின் சூழல்சார் முக்கியத்துவத்தையும், அழகையும் கொண்டாடும் வகையில் இந்த நாட்காட்டி அமைந்துள்ளதுடன், நாட்டின் இயற்கை பாரம்பரியத்தின் பெறுமதியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கண்டல்தாவர கட்டமைப்பு வேகமாக அழிவடைந்து வருகின்றன. இலங்கைக்கு உயிரியல் பரம்பலையும் காலநிலை மாற்ற மீண்டெழுந்திறனையும் வழங்குவதில் கண்டல்தாவரங்கள் ஆற்றும் பங்களிப்புக்கு முக்கியத்துவமளித்து தனது 2024ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் இதனை உள்வாங்குவதற்கு SLT-MOBITEL தீர்மானித்திருந்தது. அத்துடன், நாட்டில் எஞ்சியிருக்கும் கண்டல்தாவரங்களை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது.
SLT இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “தேசத்தின் டிஜிட்டல் மாற்றயமைப்புப் பணிகளை முன்னெடுப்பதில் முன்னோடிகள் எனும் வகையில், SLT-MOBITEL தனது பொறுப்புணர்வு என்பது வியாபார இலக்குகளை எய்துவதற்கு அப்பாலானது என்பதை உணர்ந்துள்ளது. எமது 2024 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் கண்டல் தாவர கட்டமைப்பின் முக்கியத்துவத்தை உள்வாங்கியுள்ளதுடன், அதனூடாக நிலைபேறாண்மை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், செயற்பாடுகளுக்கான உரையாடல்களை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். எமது மேம்படுத்தப்பட்ட வலையமைப்புகள் மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவுவதைப் போலவே, சமநிலையான வாழ்வாதாரத்தையும், காலநிலை மாற்றத்தில் மீண்டெழுந்திறனையும் கண்டல்தாவரங்கள் பிரதிபலிக்கின்றமையில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். தேசிய வர்த்தக நாமம் எனும் வகையில், எதிர்காலத் தலைமுறையினருக்காக இயற்கையுடன் இணைந்த கட்டமைப்புகளை பேணிப் பாதுகாக்க வேண்டிய சூழல்சார் அக்கறையை வெளிப்படுத்தவும், கட்டியெழுப்பவும் SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளது.” என்றார்.
இந்த நாட்காட்டி 12 வர்ணமயமான ஓவியங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும், இலங்கையின் வெவ்வேறு கண்டல் தாவர கட்டமைப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. இந்த நாட்காட்டிக்கு பங்களிப்பு வழங்கிய ஓவியக் கலைஞர்களான புலஸ்தி எதிரிவீர, பரமி வித்யாரத்ன மற்றும் பியுமி மஹேஷிகா ஆகியோரினால் உயிரினங்களுக்கும் கண்டல் தாவரங்களுக்கிடையிலும் காணப்படும் இடைத் தொடர்புகள் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கண்டல் தாவரங்களின் அழகு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்காக தமது ஆக்கத்திறன்களை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
தேசிய கண்டல் தாவர நிபுணத்துவ குழுவின் தலைமை அதிகாரி மற்றும் இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் நீரின மற்றும் கடல்வாழ் உயிரினப் பிரிவின் தலைமை பேராசிரியர் செவ்வந்தி ஜயகொடி, இந்த நாட்டிகாட்டியை வடிவமைப்பதில் வளசார் தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.
பேராசிரியர். செவ்வந்தி ஜயகொடி கருத்துத் தெரிவிக்கையில், “கண்டல் தாவர சூழல் கட்டமைப்புகள், வாழ்வாதார செயற்பாடுகள் குழுமத்துக்கான பொதுநலவாய Blue Charter அமர்வின் செயல்நிலை அங்கத்தவர் எனும் வகையில், கண்டல் தாவரங்கள் பாதுகாப்பு, மீளமைப்பு மற்றும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்றவற்றில் நேர்த்தியான படிமுறைகளை இலங்கை மேற்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், பல தசாப்த காலமாக நாம் மிகவும் மோசமாக நடத்தியிருந்த கைவிடப்பட்ட மற்றும் பாதிப்படைந்த சூழல்கட்டமைப்புடன் நாம் இயங்குகின்றோம். எனவே, அனைவர் மீதும் அன்பும் அரவணைப்பும் இந்நேரத்தில் அவசியமானதாக அமைந்துள்ளது. எமது தேசத்தையும், தேசத்தின் சொத்துகளையும் பேணி பாதுகாப்பதில் நாம் முக்கிய பங்காற்றியிருந்தோம்.” என்றார்.
21 வகையான கண்டல் தாவர வகைகளின் இருப்பிடமாக இலங்கை அமைந்துள்ளது. இவை நாட்டின் கரையோர ஈரநிலங்களில் பிரத்தியேகமான வகையில் பரம்பலடைந்துள்ளன. இலங்கையின் கரையோரத்தின் மொத்தமாக சுமார் 19,000 ஹெக்டெயர் பகுதி கண்டல் தாவரங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தாவரங்களினால் மூடப்பட்டுள்ளன.
கண்டல் தாவரங்கள் நிலத்தின் மேலான பகுதியில் மாத்திரம் உயிரியல் வாயுவை கொண்டிருக்காமல், தமது வேர் கட்டமைப்புகளிலும், சூழவுள்ள பகுதிகளிலும் கொண்டிருக்கும். கண்டல் தாவர பகுதிகளைச் சேர்ந்த மண்ணில் நீண்ட காலப்பகுதிக்கு காபன் தேங்கியிருப்பதால், நீண்ட கால காபன் களஞ்சியப்படுத்தலுக்கு பங்களிப்பு வழங்கும். வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அளவை குறைப்பதால், காலநிலை மாற்றத்தை தணிப்பதில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இலங்கைக்கு முக்கியமாக, கண்டல் தாவரங்கள், கரையோர சமூகங்களுக்கு உணவு, எரிபொருள், விறகு மற்றும் மருத்துவ வளங்களை வழங்குகின்றன. அத்துடன், மீன்பிடி பகுதிகளையும் தோற்றுவிக்கின்றன. இயற்கை கடல்சுவர்களாக திகழ்வதனூடாக, இயற்கை அனர்த்தங்களை தணித்தல், அரிப்புகளை தணித்தல் மற்றும் மீள் சுழற்சிக்குட்படுத்தப்பட்ட போசணைகளுடன் சூழவுள்ள சூழல் கட்டமைப்புகளுக்கு வளமூட்டல் போன்றவற்றையும் வழங்குகின்றன. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் இவை அமைந்திருப்பதுடன், இயற்கையுடன் இணைப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago