2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

SLT-MOBITEL இடமிருந்து Uber க்கு விசேட இணைப்புத் தீர்வுகள்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, போக்குவரத்து, உணவு விநியோக சேவைகள் app ஆன Uber உடன் இணைந்து, பெறுமதி சேர்க்கப்பட்ட இணைப்புத்திறன் தீர்வுகளை, இலங்கையில் Uber கட்டமைப்பில் பதிவு செய்துள்ள விற்பனையாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் சாரதிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளது.

பங்காண்மையின் அங்கமாக, விற்பனையாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் சாரதிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க தீர்வுகள் ‘Uber Package’ எனும் நாமத்தில் அறிவிக்கப்பட்டன. இந்நிகழ்வில், இரு நிறுவனங்களினதும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் இணையப் பாவனை அதிகரித்துக் காணப்படும் சூழலில், உயர் டேட்டா நுகர்வுடன், app அடிப்படையிலான பொருளாதாரத்தில், இந்த பக்கேஜினால் டேட்டா, அழைப்புகள் மற்றும் SMS தேவைகள் போன்றன ஒப்பற்ற கட்டணத்தில் வழங்கப்படுகின்றன. பக்கேஜ்களின் உள்ளம்சங்களில் Uber, Google Maps மற்றும் WhatsApp ஆகியவற்றுக்கு 15 GB டேட்டா மற்றும் இதர இணையப் பாவனைக்கு மேலதிக 5GB எனிடைம் டேட்டா வழங்கப்படும். இவற்றுக்கு மேலதிகமாக, எந்த வலையமைப்புக்கும் 750 நிமிடங்களுக்கான அழைப்புகள் மற்றும் 750 SMSகள் ஆகியன ரூ 597க்கு வழங்கப்படும்.

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL பல்வேறு டிஜிட்டல் இடையீடுகளினூடாக, தேசிய இணைப்புத்திறனை மேம்படுத்துவதில் எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளது. Uber உடனான SLT-MOBITEL இன் பங்காண்மையின் மூலம், அறிவுத்திறன் நிறைந்த சமூகம் உருவாக்கப்படுகின்றது.

Uber பக்கேஜினால் செலுத்தும் பணத்துக்கு சிறந்த பெறுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சௌகரியத்தினூடாக, விற்பனையாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் சாரதிகளுக்கு Uber கட்டமைப்பில் இணைந்திருப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். அதனூடாக, பெறுமதி சங்கிலியில் காணப்படும் அனைவரின் ஒட்டுமொத்த அனுபவமும் மேம்படுத்தப்படும். Uber பக்கேஜை செயற்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் #170# என்பதை டயல் செய்யலாம், பக்கேஜின் பெறுமதியை ரீலோட் செய்யலாம் அல்லது SLT-MOBITEL Self-care app ஐ பயன்படுத்தலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X