2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

SLT-MOBITEL இடமிருந்து ‘Aviator Prime’ HD அறிமுகம்

Freelancer   / 2024 ஜூன் 17 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL’இன் புதிய Aviator Prime இனால், தடங்கல்களில்லாத களிப்பூட்டும் வீடியோ காட்சிகளை HD தரத்தில் எந்நேரத்திலும், எதற்காகவும் பார்வையிட்டு அனுபவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை புரிந்து கொண்டும், தடங்கல்களில்லாத இணைப்புடன், anytime இணைய வசதியை வழங்கும் வகையிலும், SLT-MOBITEL இன் புதிய Aviator Prime HD பக்கேஜ்களினால் உயர் மொபைல் அனுபவம் வழங்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு தமக்கு பிடித்த ஒன்லைன் செயற்பாடுகளை எந்தவித தடங்கல்களுமின்றி மேற்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாக்கமான பக்கேஜ்களினூடாக, அதிவேக இணைய இணைப்பு உறுதி செய்யப்படுவதுடன், வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை. எந்த வலையமைப்புக்கும் அன்லிமிடெட் அழைப்புகளுடன், SMS Bundleகளும் வழங்கப்படுகின்றன. அத்துடன், இணைய வேகங்கள் பற்றி கவலை கொள்ளாமல், Meta மற்றும் YouTube போன்ற சமூக ஊடக தளங்களில் high definition (HD)இல் வீடியோக்களை பார்வையிடும் வசதியும் வழங்கப்படுகின்றது. பாவனையாளர்களுக்கு தமக்கு பிடித்த ஒன்லைன் அம்சங்களை தடங்கல்களின்றி ஸ்ட்ரீம் செய்து, பிரவுஸ் செய்து ஈடுபாட்டை பேணக்கூடிய வகையில் பக்கேஜ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தடங்கல்களால் ஏற்படும் தாமதங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் விடுபட்டு, தடங்கல்களில்லாத களிப்பூட்டும் அம்சங்களை பார்வையிடும் சுதந்திரத்தை பெறுகின்றனர். புதிய திரைப்படங்கள், சின்னத்திரை நாடகத் தொடர்கள் அல்லது இசையை கேட்டு மகிழ்வது என சகலதையும் இந்த பக்கேஜ்கள் தடங்கல்களின்றி முன்னெடுக்க உதவுகின்றன.

அதிவேக இணைய இணைப்புகளை வழங்குவதற்கு மேலதிகமாக, Aviator Prime HD பக்கேஜ்களில் எந்த வலையமைப்புக்கும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் SMS Bundle கள் வழங்கப்பட்டு, எப்போதும் ஒபற்ற தொடர்பாடல் உறுதி செய்யப்படுகின்றது.

வாடிக்கையாளர்களுக்கு தமது தேவைகளுக்கேற்ப தினசரி, மாதாந்த மற்றும் நீடித்த செல்லுபடியாகும் தெரிவுகளுடன் பொருத்தமான பக்கேஜ்களை தெரிவு செய்து கொள்ளலாம். தினசரி பக்கேஜ் முதல் மாதாந்த பக்கேஜ் வரை, SLT-MOBITEL இடமிருந்து தினசரி வாழ்க்கை முறை மற்றும் பணத்தொகைக்கு பொருத்தமான தெரிவை மேற்கொள்ளலாம்.

1 நாளுக்கான Aviator பக்கேஜுக்கு, பாவனையாளர்களுக்கு 1.5GB, Unlimited any net அழைப்புகள் மற்றும் 30 SMS கள் ரூ. 98 க்கு வழங்கப்படுகின்றன. Aviator Pro பக்கேஜ் என்பது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதுடன், 45GB டேட்டாவை (நாளொன்றுக்கு 1.5GB), Unlimited any net அழைப்புகள் மற்றும் 1000 SMS ஆகியவற்றை ரூ.1555 வாடகையுடன் வழங்கும். Aviator Pro Max deal என்பது 90 நாட்களுக்கு வழங்கப்படுவதுடன், 90GB (நாளொன்றுக்கு 3GB), Unlimited any net calls மற்றும் 1000 SMS போன்றவற்றை ரூ.2999 க்கு வழங்கும். சகல பக்கேஜ்களுக்கும் இலவச WhatsApp, Google Maps மற்றும் Waze ஆகியன வழங்கப்படும்.

சகல மொபைல் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் Aviator HD பக்கேஜ்களை பார்வையிட முடியும். Aviator Prime HD பக்கேஜை செயற்படுத்திக் கொள்வதற்கு, வாடிக்கையாளர்கள் தமது கணக்குக்கு Selfcare App இனூடாக அல்லது சௌகரியமான இதர முறைகளான விற்பனை நிலையங்கள், மொபைல் ஸ்ரோர்கள் அல்லது வங்கிகளின் appகளினூடாக ரீலோட் செய்யலாம். செயற்படுத்தல் செயன்முறை ஒப்பற்றதாக அமைந்திருப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் அனுகூலங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் உள்ளது.

SLT-MOBITEL இன் Aviator Prime HD பக்கேஜ்கள், பாவனையாளர்களின் வாழ்க்கை முறைக்கு ஒப்பற்ற வகையில் ஒன்றிணைந்து திகழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .