Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 26 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப வலுவூட்டப்பட்ட பிரத்தியேகமான திறன் கட்டமைப்பான mStudio ஐ அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இசைக் கலைஞர்கள் மற்றும் கலைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த அறிமுகம் அமைந்துள்ளது. One Galle Face இன் PVR Cinemas இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அறிமுக நிகழ்வில் தொலைக்காட்சி மற்றும் இசைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் SLT-MOBITEL இனால் மேற்கொள்ளப்படும் பரந்தளவு செயற்பாடுகளில் ஒரு அங்கமாக mStudio அறிமுகம் அமைந்துள்ளது. பரந்தளவு பின்புலங்களைக் கொண்ட நபர்களுக்கு வலுச்சேர்ப்பதை அடிப்படையாகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள mStduio இனால், இலங்கையர்களுக்கு தரமான இசையை தயாரிப்பது, உருவாக்குவது மற்றும் அனுபவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும். mStudio Online, mStudio Talent, mStudio Live மற்றும் mStudio Unplugged ஆகிய நான்கு பகுதிகளை mStudio கொண்டிருக்கும். இதனூடாக, இசை அனுபவிக்கப்படுவது, பகிரப்படுவது மற்றும் கொண்டாடப்படுவதில் புத்தாக்கமான மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும்.
mStudio இன் வெற்றியின் பின்னணியில், SLT-MOBITEL இன் நவீன 5G வலையமைப்பு தங்கியுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் முதுகெலும்பாக அமைந்திருப்பதுடன், எதிர்பார்ப்புகள் நிறைந்த இசைக் கலைஞர்களை தமது ரசிகர்களுடன் இணைப்பதுடன், தமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவதற்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. mStudio மற்றும் அதன் ஒப்பற்ற இணைப்புத்திறனுடன், SLT-MOBITEL இனால் 22 மில்லியனுக்கு அதிகமானவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு வலுச் சேர்க்கப்படும் என்பதுடன், நாடு முழுவதிலும் இசைச் சிறப்பில் புதிய அலையை தோற்றுவிப்பதாகவும் அமைந்திருக்கும். mStudio என்பது, ஒரு கட்டமைப்பு மாத்திரமன்றி, இசைத் துறையினுள் ஆர்வமுள்ளவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய கட்டமைப்பாக அமைந்துள்ளது. இசை கட்டமைப்பில் பெறுமதி சேர்க்கும், mStudio இனால், பிரதான ஊடக நாளிகைகளுக்கு களிப்பூட்டும் அம்சங்களையும் சிறந்த இனை அனுபவங்களை வழங்குவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago