2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

SLT-MOBITEL ஆறு விருதுகளை வென்றது

Freelancer   / 2024 ஜூலை 19 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, அண்மையில் நடைபெற்ற தேசிய செயற்திட்ட முகாமைத்துவ சிறப்பு விருதுகள் 2024 இல் ஆறு பெருமைக்குரிய விருதுகளை தனதாக்கியிருந்தது. இந்த விருதுகளை சுவீகரித்ததனூடாக, புத்தாக்கமான தீர்வுகளில் முன்னோடியாக திகழ்தல், டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்தல் மற்றும் இலங்கையர்களை வாழ்க்கைக்கு வளமூட்டல் ஆகியவற்றில் SLT-MOBITEL காண்பிக்கும் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

செயற்திட்ட முகாமைத்துவத்தில் உயர்மட்ட நியமங்களை பெற்றுக் கொடுப்பதில் SLT-MOBITEL அணியினர் காண்பிக்கும் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு துறைகளில் மாற்றங்களை முன்னெடுக்கக்கூடிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. நிறுவனத்தின் புரட்சிகரமான ஆய்வு மற்றும் அபிவிருத்தி திட்டமான ‘Embryo’ அணியினர், மூன்று தங்க விருதுகளை சுவீகரித்திருந்தனர்.

Embryo இனால் முன்னெடுக்கப்பட்டிருந்த GenAI-based enterprise knowledge hub தீர்வான ‘The Aisle’ திட்டத்துக்கு AI மற்றும் Data Science பிரிவில் சிறந்த நிர்வகிக்கப்பட்ட செயற்திட்டத்துக்கான தங்க விருது வழங்கப்பட்டிருந்தது. தாவரங்களில் நோய்களை இனங்காண்பதற்கான நிழல்படமெடுத்தலினூடாக இனங்காணும் தீர்வான ‘GrowMentor’ திட்டத்துக்கு, விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரிவில் சிறந்த நிர்வகிக்கப்பட்ட செயற்திட்டத்துக்கான தங்க விருது வழங்கப்பட்டிருந்தது.  அணியினால் முன்னெடுக்கப்பட்ட cloud மற்றும் ML அடிப்படையிலான வாகன தரிப்பு நிர்வகிப்பு தீர்வான ‘Park n Pay’ திட்டத்துக்கு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வலையமைப்புகள் மற்றும் தொடர்பாடல்கள் பிரிவில் சிறந்த நிர்வகிக்கப்பட்ட செயற்திட்டத்துக்கான தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. மேலும், தொழிற்சாலை தன்னியக்கமயப்படுத்தலுக்கான AI மற்றும் IoT அடிப்படையிலான தீர்வான ‘SenseGrid,’ க்கு உற்பத்தித்துறையில் சிறந்த நிர்வகிக்கப்பட்ட செயற்திட்டத்துக்கான வெள்ளி விருது வழங்கப்பட்டது.

இதர வெள்ளி விருதுகளை சுவீகரித்த SLT-MOBITEL செயற்திட்டங்களில், local demands மற்றும் freelance messengers இணைப்பை ஏற்படுத்தும் மொபைல் சந்தைப்பகுதியான ‘Duthaya Mobile App’ க்கு, புத்தாக்கமான செயற்திட்டத்தில் சிறந்த நிர்வகிக்கப்பட்ட செயற்திட்டத்துக்கான விருது வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முழு செயற்திறனைக் கொண்ட மொபைல் அப்ளிகேஷனை, SLT-MOBITEL இன் Global Business SBU அணி வடிவமைத்திருந்ததுடன், SLT IT அணியினால் மென்பொருள் வடிவமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் தீர்வுகளில் சிறந்த நிர்வகிக்கப்பட்ட செயற்திட்டத்துக்கான வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை செயற்திட்ட முகாமைத்துவ நிறுவகம் (PMI) கொழும்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய செயற்திட்ட முகாமைத்துவ சிறப்பு விருதுகள், வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுவதுடன், இலங்கையில் செயற்திட்ட முகாமைத்துவத்தில் பல்வேறு துறைகளில் முன்னெடுக்கப்படும் சிறந்த செயற்திட்டங்களை இனங்கண்டு கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X