Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, அனுசரணையில் இடம்பெற்ற The Hack:AI 2021 Hackathon வெற்றிகரமாக நிறைவுற்றது. இந்த நிகழ்வின் வெற்றியாளர்களினால் நிலைபேறான வாழ்க்கைக்கு அவசியமான புத்தாக்கமான தீர்வுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
பாடசாலைகள் பிரிவில் கொழும்பு கேட்வே கல்லூரியின் ‘Calori’ வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், பல்கலைக்கழகங்கள் பிரிவின் வெற்றியாளராக கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ‘Prostasia’ வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
SLT இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “Hack:AI 2021 Hackathon இன் சவாலாக நிலைபேறான தீர்வுகளை வெளிப்படுத்துவது மற்றும் நிஜ உலக பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தேடுவது போன்றன அமைந்திருந்தன. தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை இந்தப் போட்டி வெளிப்படுத்தியிருந்தது என்பதில் SLT-MOBITEL நம்பிக்கை கொண்டிருந்ததுடன், ஆரோக்கியமான உலகை ஊக்குவிப்பது என்பதிலும் கவனம் செலுத்தியிருந்தது. பங்கேற்றிருந்தவர்கள் மற்றும் பரந்தளவு அணிகள் போன்றவற்றினூடாக இயந்திரப் பயிலல் மற்றும் artificial intelligence ஊடாக புதிய சிந்தனைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை தொடர்பில் நாம் பெருமை கொள்கின்றோம். சகல அணிகளும் விசேட கௌரவிப்புக்கு ஏற்புடையன என்பதுடன், அவர்களின் கடின உழைப்பு மற்றும் பங்களிப்புக்காக நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.
STEMUP கல்வி மையத்தின் பணிப்பாளர் பிரபாத் மன்னப்பெரும கருத்துத் தெரிவிக்கையில், “Hack:AI போட்டியினூடாக, பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களை கவர்ந்து, AI மற்றும் இயந்திரப் பயிலலை பயன்படுத்தி நிஜ உலகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஊக்கமளிக்கப்பட்டிருந்தது. எதிர்காலத் தலைமுறைகளுக்கு நிலைபேறாண்மையை முன்னெடுத்துச் செல்வது மற்றும் ஆரம்பநிலை வர்த்தகங்களைக் கட்டியெழுப்புவது மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கங்களை அறிமுகம் செய்வது போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கும்.” என்றார்.
Hack:AI 2021 இனால் இளைஞர்களுக்கு, நிஜ உலகப் பிரச்சனைகளுக்கு Artificial Intelligence (AI) மற்றும் இயந்திரப் பயிலல் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புத்தாக்கமான தீர்வுகளை வடிவமைப்பதற்கு வாய்ப்பளித்திருந்தது.
பங்கேற்றிருந்த பிரிவுகள் – பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஒரே விதமான பிரச்சனைகள் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளான (SGD) சிறந்த சுகாதாரம் மற்றும் நலன், தரமான கல்வி, நிலைபேறான நகரங்கள் மற்றும் சமூகங்கள், தொழிற்துறை, புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு, பொறுப்பு வாய்ந்த நுகர்வு மற்றும் உற்பத்தி போன்ற பிரிவுகளில் பிரச்சனை அறிக்கைகள் வழங்கப்பட்டிருந்தன. இளம் புத்தாக்க வடிவமைப்பாளர்களுக்கு தரவு விஞ்ஞானத்தையும் இயந்திரப் பயிலல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, தெரிவு செய்யப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதனூடாக சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெறல் மற்றும் சமூகத் தாக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான களத்தை இந்தப் போட்டி வழங்கியிருந்தது.
Hack:AI 2021 Hackathon ஐ STEMUP கல்வி மையம் ஏற்பாடு செய்திருந்தது. இது இலாப நோக்கற்ற சம்மேளனமாக அமைந்திருப்பதுடன், STEM தொழில்நிலை மற்றும் திறன்கள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள மாணவர்களை, மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களுக்கான இலங்கை சம்மேளனம் (SLASSCOM) மற்றும் இலங்கை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP) போன்றவற்றுடன் இணைந்து செயலாற்ற ஊக்குவித்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
6 minute ago
17 minute ago