Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2023 ஏப்ரல் 10 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, சகல புதிய மற்றும் ஏற்கனவே காணப்படும் ஃபைபர் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமான கடனட்டை தவணைக் கொடுப்பனவு வெகுமதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சலுகையின் அங்கமாக, விசேடமான டேட்டா பக்கேஜ்களினூடாக, விலைக் கழிவுகள் வழங்கப்படுவது மாத்திரமன்றி, வாடிக்கையாளர்களுக்கு மாதாந்த அடிப்படையில், அதிகளவு டேட்டாவை வழங்குவதுடன், தமது கடனட்டைகளினூடாக, தமது வங்கியின் பிரகாரம், வட்டியில்லாத தவணைமுறையில் மாதாந்தம் மீளச் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகின்றது.
இலங்கையில் நிலவும் பொருளாதார சூழ்நிலை, தொலைத்தொடர்பாடல் சந்தையை அதிகளவு போட்டிகரமானதாக திகழச் செய்துள்ளதுடன், செலவுகளைக் கட்டுப்படுத்தலின் முக்கியத்துவத்தை SLT-MOBITEL உணர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு சகாயமான தீர்வுகளை வழங்குகின்றது. அதன் பிரகாரம், நிறுவனத்தினால் ஃபைபர் ஹோம் இணைப்புகளுக்கு, இலங்கையின் முன்னணி வங்கிகளுடன் இணைந்து கடனட்டை கொடுப்பனவு வெகுமதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய திட்டங்களில், புதிய மற்றும் ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு Triple Play மற்றும் Double Play பக்கேஜ்கள் அடங்கியுள்ளன. புதிய வாடிக்கையாளர்களுக்கு, Triple Play பக்கேஜில் புதிய இணைப்பு மற்றும் குரல், புரோட்பான்ட் மற்றும் PEOTV ஆகியன 12 மாதங்களுக்கு ரூ. 82,990 எனும் கட்டணத்தில் வழங்கப்படுகின்றது. புதிய வாடிக்கையாளர்களுக்கான Double Play BB பக்கேஜில், புதிய இணைப்பு மற்றும் குரல் மற்றும் புரோட்பான்ட் இணைப்பு 12 மாதங்களுக்கு ரூ. 54,960 க்கு வழங்கப்படுகின்றது. ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு, Triple play பக்கேஜில், குரல், புரோட்பான்ட் மற்றும் PEOTV ஆகியன 12 மாதங்களுக்கு ரூ. 69,450 எனும் கட்டணத்தில் வழங்கப்படுகின்றது. Double Play பக்கேஜில், குரல் மற்றும் புரோட்பான்ட் ஆகியன 12 மாதங்களுக்கு ரூ. 41,420 க்கு வழங்கப்படுகின்றன.
அனைத்து ப்ளான்களும் மாதாந்த புரோட்பான்ட் கோட்டாவான 75GB anytime data மற்றும் 25GB YouTube ஆகியவற்றை கொண்டிருக்கும். வாடிக்கையாளர்களுக்கு அதே பக்கேஜை கொண்டிருக்கும் தெரிவு அல்லது வேறொரு கிடைக்கும் பக்கேஜுக்கு மாறும் வசதி வழங்கப்படுகின்றது.
தமது வாடிக்கையாளர்களுக்கு சகாயமான மற்றும் அணுகக்கூடிய சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு புதிய கடனட்டை வெகுமதிகள் என்பது அந்த அர்ப்பணிப்புக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. அதிகளவு நெகிழ்ச்சி மற்றும் சௌகரியத்தை வழங்கும், மாதாந்த தவணைக் கட்டணங்களில் தமது ப்ளான்களுக்கு கட்டணம் செலுத்தும் கடனட்டை வசதியின் பயனை பெற்றுக் கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
2 hours ago