2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

SLT-MOBITEL PEOTV இல் உலகக் கிண்ணப் போட்டிகளை இலவசமாக பார்வையிடும் வசதி

Freelancer   / 2023 நவம்பர் 03 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

Internet Protocol Television (IPTV) சேவை வழங்குநரான SLT-MOBITEL PEOTV, நாட்டின் கிரிக்கட் ரசிகர்களுக்கு தற்போது இந்தியாவில் நடைபெறும் ICC ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் 2023 ஐ, IPTV மற்றும் OTT கட்டமைப்புகளில் Event TV HD (Ch.No 310) இல் கண்டு களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முற்றிலும் high-definition (HD) தரத்தில் ஒளிபரப்பாகும் இந்த போட்டிகளை, Event TV SD (Ch.No 20) இலும் முற்றிலும் இலவசமாக கண்டு களிக்க முடியும். இதனூடாக, நேரலை கிரிக்கட் போட்டிகளை கண்டுகளிக்கும் அனுபவம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

முன்னரை விட கிரிக்கட் போட்டிளுடன் ரசிகர்களை மேலும் நெருக்கமடையச் செய்யும் வகையில், SLT-MOBITEL PEOTVGO இனால் SLT-MOBITEL மொபைல் வாடிக்கையாளர்களுக்கு சகல போட்டிகளையும் மொபைல், டப்லெட், மடிக்கணனி அல்லது கணனியில் எங்கிருந்தும், எந்நேரத்திலும் இலவச UNLIMITED DATA உடன் கண்டு மகிழும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. play store /app store இலிருந்து PEOTVGO app ஐ வாடிக்கையாளர்கள் டவுன்லோட் செய்து விசேட சலுகையில் எவ்விதமான மேலதிகக் கட்டணங்களுமின்றி கிரிக்கட் உலகக் கிண்ண போட்டிகளை கண்டு களிக்கலாம்.

இலங்கையில் காணப்படும் முன்னணி IPTV சேவை வழங்குநராக PEOTV திகழ்வதுடன், களிப்பூட்டும் அம்சங்களுக்காக அதன் புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வழிமுறைகள் போன்றவற்றுக்காக அதிகளவில் அறியப்படுகின்றது. SLT-MOBITEL PEOTV இனால் உலகத் தரம் வாய்ந்த களிப்பூட்டும் மற்றும் தகவல்கள் அடங்கிய விநோத அம்சங்கள் ஒரு மில்லியன் இல்லங்களில் வழங்கப்படுவதுடன், இந்த எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. PEOTV இனால் மாபெரும் HD அலைவரிசைத் தெரிவுகள் வழங்கப்படுவதுடன், உள்நாட்டு, சர்வதேச அலைவரிசைகளையும் கொண்டுள்ளது. மேலும், ஆங்கிலம், சிங்களம், தமிழ், மலையாளம் மற்றும் இதர மொழிகளில் பெருமளவு திரைப்படங்களையும் கொண்டுள்ளது. மேலும் பார்வையாளர்களுக்கு நேரலை விளையாட்டுகள், விநோத தகவல்கள், களிப்பூட்டும் நிகழ்ச்சிகள், செய்திகள் மற்றும் கல்விசார் நிகழ்ச்சிகளை சகல வயதினருக்கும் பொருந்தும் வகையில் கண்டுகளிக்க முடியும். உயர் தரம் வாய்ந்த உள்ளடக்கங்கள் மற்றும் ஒப்பற்ற ஸ்ட்ரீம் செய்யும் அனுபவங்களை வழங்குவதற்கான அர்ப்பணிப்புடன், SLT-MOBITEL PEOTV தொடர்ந்தும், இலங்கையர்கள் தொலைக்காட்சியை கண்டு களிக்கும் முறையில் புதுமைகளுடன் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .