Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 21 , மு.ப. 04:57 - 0 - 19
SLT-MOBITEL இன் கல்விப் பிரிவான SLT-MOBITEL Nebula Institute of Technology க்கு, பெருமைக்குரிய Pearson BTEC Higher Education Forum 2024 நிகழ்வில் சர்வதேச கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. சிறந்த செயற்பாட்டுக்கான கௌரவிப்பாக தொடர்ச்சியான இரண்டாவது வருடமாக இந்த உயர் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டுக்காக சர்வதேச நிலை 3 மற்றும் நிலை 5 உயர் தேசிய கௌரவிப்பு விருதை கல்வியகம் பெற்றுக் கொண்டதுடன், உயர் தரம் வாய்ந்த தொழினுட்ப கல்வியை வழங்குவதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது.
Nebula Institute க்கு இந்த விருதை இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் கௌரவ. அன்ட்ரியு பெட்ரிக் வழங்கியிருந்தார். Pearson இன் பிரதிநிதிகளில் Pearson South Asia பிராந்திய தொழில் வாய்ப்பு மற்றும் தகைமைகள் பணிப்பாளர் பிரெமிலா போல்ராஜ், Pearson South Asia பிராந்திய HEQ சர்வதேச விற்பனை சிரேஷ்ட பணிப்பாளர் சித்தார்த் பர்னேர்கர் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான BTEC, PTE, and HEd Courseware போன்றவற்றின் விற்பனை பிரதி பொது முகாமையாளர் சூரியா பிபிலே ஆகியோர் கலந்து கொண்டனர். SLT இன் மனித மூலதன விருத்தி பொது முகாமையாளர் ஜனக சில்வா SLT-MOBITEL Nebula Institute சார்பாக கௌரவிப்பை பெற்றுக் கொண்டதுடன், நிகழ்வில் பொறியியலாளர் தர்ஷன பண்டாரவும் கலந்து கொண்டார்.
Nebula Institute of Technology இனால் பரந்தளவு நவீன தொழினுட்பம் மற்றும் பொறியியல் கற்கைகள் வழங்கப்படுவதுடன், தொழினுட்ப துறையின் அதிகரித்துச் செல்லும் கேள்விகளை நிவர்த்தி செய்வதாக அமைந்திருக்கும். கவனமான முறையில் வடிவமைக்கப்பட்ட பாடவிதானங்களினூடாக துறையில் காணப்படும் பாரதூரமான சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு மாணவர்களுக்கு பிரயோக ரீதியான, சந்தைக்கு பொருத்தமான தகைமைகள் வழங்கப்பட்டு, தமது தொழில் வாழ்வை மாற்றியமைத்துக் கொள்ள வசதியளிக்கின்றது.
கல்வியகத்தின் கல்விசார் பிரிவுகளில் BEng (Hons) in Electrical & Electrical Engineering, BEng (Hons) in Robotic & Artificial Engineering, BSc (Hons) in Data Science, Pearson BTEC Level 5 HND in Electrical and Electronic Engineering, Pearson BTEC Level 5 HND in Digital Technologies, Pearson BTEC Level 5 HND in Computing மற்றும் Pearson BTEC International Level 3 Foundation போன்றன அடங்கியுள்ளன.
மேலதிக கற்கைகளான Certificate In Applied Information Technology CAIT, Telecommunication Technician National Vocational Qualification (NVQ) 4/3, Optical Fibre Courses, Network Security Courses மற்றும் CompTIA Security program போன்றனவும் கிடைக்கின்றன.
கல்வியகம் தரமான கல்வியை வழங்குவது, தனிநபர்களின் மீது கவனம் செலுத்துவது, தொழினுட்ப நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் நேரடி அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பது மற்றும் சகாயமான கற்கை கட்டணங்களை பேணுவது போன்றவற்றினூடாக தன்னை உறுதியாக நிலையில் பேணுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago