Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 02, வியாழக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 01 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL இன் கல்விப் பிரிவான SLT-MOBITEL Nebula Institute of Technology க்கு, Campus Chapter இன் 10ஆவது IET எனும் கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. Institute of Engineering Technology (IET) உடனான பங்காண்மையினூடாக, Nebula Institute ஆனது, அதன் சகல நிலைகளையும் சேர்ந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டம் பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் தமது கல்வியை தொடரவும், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் ஆதரவளிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் அல்லது ஊழியர்களுக்கு IET இன் சமூகத்தில் அங்கம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளது.
இந்த கௌரவிப்பு வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றதுடன், அதில் பிரதம அதிதியாக IET இலங்கை வலையமைப்பின் (SLN) செயலாளர் பேராசிரியர். அனுருத்த ஜயகொடி கலந்து கொண்டார். அத்துடன், IET இலங்கை வலையமைப்பின் (SLN) உப தலைவர் நளீன் ஜயசூரிய, SLT-MOBITEL Nebula Institute of Technology இன் பிரதி பொது முகாமையாளர் கலாநிதி. ஆசிரி இந்திக, IET இலங்கை வலையமைப்பின் (SLN) இளம் நிபுணர்கள் வலையமைப்பின் தவிசாளர் நிமந்த மதுஷான், 2021 ஆம் ஆண்டுக்கான இளம் பெண் பொறியியலாளர் வெற்றியாளரான பமோத்யா சேனநாயக்க ஆகியோரும், Nebula மற்றும் IET இன் இதர சில உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
IET சமூகத்தின் அங்கமாக, Nebula Institute இன் மாணவர்களுக்கு தமது தொழில் நிலையை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் பெருமளவு வளங்கள் மற்றும் ஆதரவை பெற்றுக் கொள்ள முடியும். இதில், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபுணத்துவ பதிவு மற்றும் விருத்தி, சர்வதேச பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் தொடர்பாடல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள், நவீன ஆய்வு மற்றும் உள்ளார்ந்த அம்சங்களை அணுகல் மற்றும் நிகழ்வுகள், கற்கைகள் மற்றும் பிரசுரங்களை அணுகும் வாய்ப்பு போன்றன வழங்கப்படும்.
இந்த கௌரவிப்பினூடாக, Nebula மாணவர்களுக்கு பரந்தளவு நிபுணர்களைக் கொண்ட பீடத்தை அணுகல், பெறுமதி வாய்ந்த வளங்கள் மற்றும் நிபுணத்துவ விருத்திக்கான வாய்ப்புகள், அறிவு பகிர்வு மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப களத்தில் கைகோர்ப்பு போன்றவற்றுக்கான வாய்ப்புகள் வழங்கப்படும். கம்பஸ் வளாகத்தினுள் IET பிரிவை நிறுவியுள்ளதனூடாக, Nebula Institute இனால் மாணவர்களுக்கு தமது களங்களில் வெற்றிகரமாக செயலாற்றுவதறகு உயர் கல்விசார் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பு மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.
Institution of Electrical Engineers (IEE) மற்றும் Institution of Incorporated Engineers (IIE) ஆகியன இணைக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட IET, பொறியியல் அறிவை பகிர்ந்தளிப்பதில் முக்கிய பங்காற்றுவதுடன், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர் நியமங்களை பேணுவதில் பங்களிப்பு செலுத்துகின்றது. மேலும், கல்விசார் கற்கைகளுக்கு தகைமைகளை வழங்கல் மற்றும் நிபுணத்துவ தகைமைகளை வழங்கல் போன்றவற்றுக் மேலதிகமாக இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
அறிவு பகிர்வுக்கு அவசியமான கட்டமைப்புகளை பெற்றுக் கொடுப்பதுடன், ஆய்வுகள் மற்றும் விருத்தியில் IET முக்கிய பங்காற்றுகின்றது. நிபுணத்துவ அபிவிருத்தி வாய்ப்புகளுக்கு ஆதரவளித்து ஊக்குவிப்பதுடன், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்பில் பிந்திய தகவல்களை அறிந்திருப்பதற்கு அங்கத்தவர்களுக்கு உதவுகின்றது. உலகளாவிய பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை இணைப்பதுடன், பொறியியல் சவால்கள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் செயலாற்றக்கூடிய பொறியியல் சமூகத்தை ஊக்குவிப்பதிலும் IET பங்களிப்பு வழங்குகின்றது. மேலும், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) கல்வியை ஊக்குவித்து, இளம் வயதிலிருந்தே பொறியியல் துறையில் நாட்டத்தை ஊக்குவிக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago