Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜனவரி 22 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுகர்வோர் அனுபவங்களை மேம்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்து SLT-MOBITEL இனால், ‘My Super Offers’எனும் புதிய வெகுமதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு மொபைல் வாடிக்கையாளர்களின் பிரத்தியேகமான தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வெகுமதித் திட்டம் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாவனை, வலையமைப்பில் இணைந்துள்ள காலம் மற்றும் தெரிவுகள் போன்றவற்றுக்கமைய அனுகூலமளிக்கும் வகையில் My Super Offers அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர் அனுபவம் பிரத்தியேகமானதாகவும், வெகுமதியளிப்பதாகவும் அமைந்திருப்பதை உறுதி செய்கின்றது.
My Super Offers இனூடாக, SLT-MOBITEL மொபைல் பாவனையாளர்களுக்கு தற்போது தமது நுகர்வுக்கமைய மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய டேட்டா போனஸ்கள், இலவச குரல் நிமிடங்கள் மற்றும் இதர பிரத்தியேக ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் வெகுமதிகள் போன்ற பெறுமதிகள் மற்றும் அனுகூலங்களை அனுபவிக்க முடியும். Selfcare App இல் இந்த சலுகைகளை பார்வையிடலாம்.
My Super Offers இனூடாக, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் காணப்படும் பிரத்தியேகமான பல்வேறு சிறப்பு வெகுமதிகள் பற்றி காண்பிக்கப்படும். ரூ. 100 ரீலோட் செய்கையில் இரட்டிப்பு போனஸ்கள், ரூ. 988 ரீலோட் செய்கையில் 20 GB மேலதிக டேட்டா, ரூ. 200 ரீலோட் செய்கையில் 50 நிமிடங்கள் எந்த வலையமைப்புக்குமான அழைப்புகள் அல்லது பக்கேஜை இரட்டிப்பாக்கிக் கொள்வது என அனைவருக்கும் அனுகூலம் கிடைப்பதை SLT-MOBITEL உறுதி செய்துள்ளது.
மேலும், ரீலோட் செய்வதற்கு விற்பனை நிலையங்களுக்கு விஜயம் செய்யும் போது, வாடிக்கையாளர்களுக்கு காணப்படும் சலுகைகள் பற்றி விற்பனையாளர்களுக்கு பார்வையிட முடியும். ‘My Super Offers’ ஐ பயன்படுத்தி வாடிக்கையாளரின் மொபைல் இலக்கத்தை பதிவிடுவதனூடாக, காணப்படும் பிரத்தியேகமான சலுகைகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கும் வசதி விற்பனையாளர்களுக்கு காணப்படுவதுடன், விசேட சலுகைகளை பெற்றுக் கொள்வதற்காக உயர் பெறுமதியான ரீலோட்களை மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
My Super Offers உடன் SLT-MOBITEL இனால் வாடிக்கையாளர் அனுபவம் மேம்படுத்தப்படுவது மாத்திரமன்றி, விற்பனையாளர்களுக்கு ரிவோர்ட்ஸ் திட்டத்துடன் மேலும் ஈடுபாட்டை பேணுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் அமைந்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் win-win நிலையையும் தோற்றுவிக்கின்றது.
SLT-MOBITEL இன் My Super Offers இனூடாக, வாடிக்கையாளர் அனுபவத்தில் மற்றுமொரு தொழிற்துறை நியமம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாவனை முறைமைகளுடன் hi-tech real-time பகுப்பாய்வு ஆற்றல்களினூடாக, SLT-MOBITEL இனால் டிஜிட்டல் யுகத்தில் நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தக்கூடிய டிஜிட்டல் யுகத்தில் பெருவாரியான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இலங்கையர்களின் வாழ்க்கைக்கு வலுவூட்டுவது எனும் வர்த்தக நாமத்தின் உறுதி மொழிக்கமைய, டிஜிட்டல் இணைப்புத் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியான புத்தாக்கங்களை பெற்றுக் கொடுப்பதில் SLT-MOBITEL தொடர்ந்தும் தன்னை ஈடுபடுத்தி வருவதுடன், பரந்தளவு நுகர்வோர் தேவைகளை நிவர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்துகின்றது. வாடிக்கையாளர்களுக்கு புதிய வழிகளில் வெகுமதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் அடுத்த கட்ட பாரிய நடவடிக்கையாக My Super Offers அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago